சொல்ல துணிந்த மனசு ... posted byvilack syed mohamed ali (Kangxi)[18 September 2011] IP: 183.*.*.* China | Comment Reference Number: 8346
அஸ்ஸலாமு அழைக்கும் .,
சகோதரர் MOHAMED YOUNUS அவர்களுக்கு , ஒரு தலைவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது வாக்காளரின் விருப்பம். ஒவ்வொருவரின் விருப்பமும் வெவ்வேறாக இருக்கும். இதில் , MEGA என்றோ , OMEGA என்றோ நோட்டீஸ் விட்டு இதில் உள்ள பண்புகள் மூலம் தலைவரை பாருங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நான் விரும்பும் தலைவர் இன்னின்ன தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும் என்று நான் சிலவற்றை விரும்புகிறேன். உங்கள் விருப்பம் வேறு மாதிரியாக இருக்கலாம்.
ஆக, இதையெல்லாம் தவிர்ப்பதர்க்காகத்தான் போட்டியின்றி தேர்ந்தெடுக்க ஐக்கிய பேரவையை நாடுகிறோம். அவர்களும், வரும் applications பரிசீலித்து ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். ஆகையால் தலைவர் இப்படிப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று பொது மக்களிடம் சொல்வதைவிட ஐக்கிய பேரவையில் சொல்லுங்கள். எங்களுக்கு சிறந்த குணங்களை உடைய தலைவரை தாருங்கள் என்று கோரிக்கை விடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆளாளுக்கு நோட்டீஸ் விட்டு , சுய விளம்பரம் தேட முயர்ச்சிக்காதீர்கள்.
அடுத்து , நீங்கள் கூறியதுபோல , நாமெல்லாம் ஒருமித்த கருத்துடன்தான் துணைத்தலைவரை தேர்ந்தெடுத்தோம். அவர் செய்த நன்மைகள் நிறைய இருப்பினும் , ஒரு தீய செயலால் அத்தனை நன்மைகளையும் தொலைத்து விட்டார் . இது நாமெல்லாம் எதிர்பாராத ஒன்று. .நல்லவர் என்று நினைத்தோம், நம்மை ஏமாற்றி விட்டார் . நாம் நன்மையை நாடுகிறோம் , பிறகு ஏற்படும் தீமைகளுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம் . தீயவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்வார்கள். கவலையை விடுங்கள்.
ஆகவே மீண்டும் கூறுகிறேன் , MEGA என்றோ , OMEGA என்றோ மக்களிடம் செல்லாமல் உங்கள் எண்ணங்களை ஐக்கிய பேரவையில் பகிர்ந்து கொள்ளுங்கள் . மக்களே ! நீங்களும்தான் , உங்கள் தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை ஐக்கிய பேரவையில் சொல்லுங்கள் . அவர்கள் மூலம் , நிச்சயம் ஒரு நல்ல தலைவர் கிடைப்பார்.
ஆகவே , என் அன்பிற்கும் , பாசத்திற்கும் உரிய காயல் நகர பெரியோர்களே , தாய்மார்களே , சகோதர சகோதரிகளே ! ஒருவேளை , போட்டி என்று வந்து , ஒட்டு போடும் சூழ்நிலை வந்தால் , கவர்ச்சியான பிரசுரங்கள் , விளம்பரங்கள் , பேச்சுக்களை பார்த்து மயங்காமல் , சுயமாக சிந்தித்து முடிவு எடுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் பறக்கத் செய்வானாக
.
என்றும் நன்மையை நாடி துஆ செய்பவனாக ,
விளக்கு செய்து முகம்மது அலி ,
+ 86 13189682842
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross