Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன... posted bysalih (chennai)[25 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 8764
ஏன் உள்ளாட்சி மன்றங்களில் கட்சிகளுக்கு ஆதரவளிக்க கூடாது எனபதற்கு பல காரணங்கள் கூறலாம்.
ஒரு காரணம்: சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் ஆட்சி அமைக்க கட்சிகள் தேவைப்படலாம். ஆனால் உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சிகளின் அவசியம் இல்லை.
தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் கூட - சில கிராமப்புற பொறுப்புகளுக்கு, கட்சி சார்பாக வேட்பாளர்கள் - சட்ட பூர்வமாக நிற்கமுடியாது. அதற்க்கு தடை உள்ளது.
இந்தியாவில் - ஊழலை ஒழிக்க, பலர் பரிந்துரைக்கும் திட்டங்களில், கட்சி சார்பற்ற உள்ளாட்சி தேர்தல்களும் ஒன்று.
கட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, சில கட்சிகள் வளர்வதற்கு உதவியாக இருக்கலாம். ஆனால் - எங்கு நமக்கு முடியுமோ, அங்கு கட்சிகளை ஒதுக்கி வைப்பதே நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross