செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM.A.C.முகம்மது நூகு (சென்னை)[04 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 9506
இநேரம் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருப்பீர்கள். சூழ்ச்சியாளர்களின் வலையில் நீங்கள் வீழ்ந்து விட்டதாகவே தெரிகிறது. "விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை" எதற்காக நீங்கள் விட்டு கொடுத்தீர்கள் ஏன் அவர்கள் விட்டு கொடுக்கவில்லை அவர்கள் நினத்து இருந்தால் உங்களுக்காக விட்டு கொடுத்து இருக்கலாமே.
உங்களைப்பற்றி ஊருக்கே நல்லா தெரியும் நீங்கள் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்று ஆனால் சகோதரர் முஹம்மது முஹிதீன் எப்படி பட்டவர் என்று யாருக்குமே தெரியாது( அவரும் நல்லவராக கூட இருக்கலாம்) அப்படி இருக்க தெரியாத ஒருவருக்காக நீங்கள் ஏன் விட்டு கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு சேவை ஆற்றிட அவர்களுக்கு என்ன அவ்வளவு ஆசையா?? ஒவொரு பொது நலத்திற்கு பின்னாலும் ஒரு சுய நலம் இருக்கும். யாராலும் 100 % நன்னடத்தையோடு இருக்க முடியாது முடிந்தவரை மக்களுக்கு உதவலாம் அவர்களுக்கும் குடும்பம் உள்ளது, தேவைகளும் உள்ளது நீங்களோ காயல்பட்டணமே கதி என்றும் மக்கள் தொண்டே விதி என்றும் இருக்கிறீர்கள் அவரோ வெளி ஊரில் வியாபாரம் செய்பவர்,
அப்படி இருக்க அந்த ஜமாத்தார்கள் உங்களுக்குதானே முந்நிலை தந்திருக்க வேண்டும்.இபோது நீங்கள் விலகி விட்டதால் அவரின் வெற்றி என்ன உறுதி ஆகி விட்டதா? இல்லையே !! அவருக்கு எதிராக காட்டுத்தைக்கா தெருவை சார்ந்த அ.அ.அபுபக்கர் அஜ்வாது , மற்றும் குத்துக்கல் தெருவை சார்ந்த நோனா ஜாபர் ஆகியோர் களத்தில் உள்ளார்கள் இவர்களை மீறி அவர் வெற்றி பெற்று விடுவார் என்று நீங்களும் நினத்து விட்டீர்களா? மக்கள் செல்வாக்கு உள்ளவர்களையும், வெற்றி பெறக்கூடிய வேட்பாளரையும் தேர்தலில் இருந்து விலக செய்து விட்டு அவர்கள் நினைக்கும் நபர்களை தேர்தலில் போட்டியிடச்செய்வது அடுத்தவர்களின் வெற்றியை பறிக்க கூடிய செயலாகும்,
இது மிகவும் தவறானது. தயவு செய்து ஒற்றுமை என்ற ஒரு வார்த்தைக்காக யாரும் இதற்கு ஆதரவு தராதீர்கள் , இது போன்ற செயல்கள் மிகவும் தவறான முன்னுதாரனத்தை தரும்.பொதுவான வேட்பாளரை எல்லோரும் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும் இப்படி தேர்ந்தெடுப்பது ஜனநாயகமும் இல்லை, நேர்மையான வழி முறையும் இல்லை.
அடுத்த முறை 2 வது வார்டை உங்களுக்கு தருகிறோம் என்று கூறுகிறார்களே அவர்கள் என்ன பொது மக்களா? அவர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை அவர்கள் வார்டை சார்ந்த பொதுமக்கள் ஆதரிப்பார்களா என்று தேர்தல் முடிந்த பிறகே தெரியும் . " வென்றது மக்களா ? அல்லது மன்னரா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross