செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMeera Sahib (kayalpatnam)[05 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9596
சகோதரி ஆபிதா அவர்களே!
தங்களுடைய தந்தையின் தன்னலமற்ற பொது சேவை ஒன்றே போதும் - தங்களைப்பற்றி அறிய. ஐக்கிய பேரவையை அணுகியிருக்க தேவை இல்லை. பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய பேரவையின் செயல்பாடு பற்றி விமரிசித்தவன் நான்.
ஆனால் தற்போதைய நிலைமையை சற்று சிந்தித்துபாருங்கள். நாம் அன்னியருக்கு இடம் கொடுக்கலாமா ? உங்கள் அனைவரது செயல்பாடும் அன்னியருக்கு இடமளிப்பது ஆகிறது . இது பற்றி தற்போது மிகவும் பரவலாக சந்தோசத்தோடு அன்னியர் மத்தியில் பேசப்படுகிறது . அதற்க்கு இடம் கொடுக்கலாமா ? எனவே தாங்கள் உட்பட அனைவரும் பேரவை தேர்ந்தெடுத்த வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள் . ஐக்கிய பேரவை தவறே செய்திருந்தாலும் நம் ஊர் நன்மை கருதி விட்டுகொடுப்போம் - பாடுபடுவோம். தங்கள் தந்தையின் நெடு நாளைய நண்பர் என்ற முறையில் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross