பேரவை செய்யுமா? posted byM Sajith (DUBAI)[07 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9834
ஒன்றுக்கு இரண்டாக தன்னிலை விளக்கமளித்து தன்னால் இயன்ற வரை வெளிப்படையாகத்தான் நடந்து கொண்டோம் என்பதை தம் ஜமாத்தினர் மட்டுமல்லாது கயலின் எல்லோருக்கும் அறியத்தர வேண்டும் என்ற இந்த செயல் அந்த ஜமாத் நிர்வாகிகளின் நல்ல செயல்பாட்டின் பிரதிபலிப்பு.
பேரவையின் அனுதாபிகள் பரிந்துரைக்கும் 'நேரில்' வந்துதான் கேட்கவேண்டும் என்றில்லாமல், மக்களின் சந்தேகங்களை களையும் முகமாக கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் தரவேண்டும் என்னும் இந்த செயல் பாராட்டுக்குறியது.
'முச்சரிக்கை' என்னும் புதுமையான பழக்கத்தை பலரையும் போல இவர்களும் சரிகண்டிருப்பது மிகவும் வருத்தம். (It is an undemocratic, authoritative and unlawful practice to enforce against a birth right. That too written and singed by office holders, enough to file a case against) இதில் கையெழுத்திட வலியுருத்திய நீங்கள், இதனால் எற்படப்போகும் பின்விளைவுகளையும் குழப்பங்களையும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அதை செய்ய்திருக்க வாய்ப்பில்லை.
யார் தலையில் உதித்த உன்னதமான ஐடியாவோ தெரியவைல்லை இந்த 'முச்சரிக்கை' இத்துணை குழப்பத்துக்கும் 'ROOT CAUSE' இது தான். இதனால் தான் இன்று நம் தரப்பில் 5 போட்டியாளர்கள்.
சரியான சிந்தனையுள்ள யவரும் இந்த முச்சரிகை காலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. இதை மீரியவர்களை இதைவைத்து எந்த நடவடிகையும் எடுக்க இயலாது. மக்களின் நிராகரிப்புத்தன் வழி.
இந்த 'முச்சரிக்கை' முசீபத்து இல்லதிருந்தால், பேரவை விருப்பமனு அளித்த அனைவரையும் பேரவை நிராகரிக்காமல் வாக்களிப்புக்கு உட்படுத்தி இருக்கலாம். அதிகம் வாக்கு பெற்றவரை வேட்பாளராக்கி இருக்கலாம், அடுத்து வருபவரை மாற்று வேட்பாளர் என வெளிப்படையாக அறிவித்து இருக்கலாம். உம்மா, கம்மா டிராமா எல்லாம் அவசியமில்லை.
சற்றே காலதாமதம் என்றாலும், இந்த விளக்கம் முலம் புதுப்பள்ளி நிர்வாகத்தில் நிலைப்பட்டை வெளிப்படையாக்கியது நல்ல முன்மாதிரி.
அது போலவே பேரவையும் முச்சரிகையின் இன்றியமையாமை, வேட்பாளரகள் பெயரை 'இரகசியம்' காத்தது, தாயாரை மாற்று வேட்பாளராக்கியதன் அவசியம் (அல்லது ஒரு மறுப்பு), தேர்வுக்குழு லிஸ்டில் விடுபட்ட அமைப்புக்கள் (அழைக்கப்படவில்லையா ?) போன்ற விபரங்களுடன் ஒரு தன்னிலை அறிக்கை தரவேண்டும் இது ஒன்றுதான் இழந்த நம்பிககையை மீட்டுத்தர ஒரே வழி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross