காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 23 அன்று பதினைந்தாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ வழங்கினார்.
மாநபி மீது மாசிலா அன்பு கொண்டிருந்த மதீனத்து அன்ஸாரீ தோழர்களின் மகத்துவங்கள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 16ஆம் நாள் (மார்ச் 24) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|