காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 25 அன்று பதினேழாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ வழங்கினார்.
ஃகைபர் போர்க்கள வரலாறு, நபிகளாரின் போர் வியூகங்கள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 18ஆம் நாள் (மார்ச் 26) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் & முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|