காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 20 அன்று பன்னிரண்டாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ வழங்கினார்.
நபிகளார் காலத்தில் நடைபெற்ற தபூக், ஃகைபர் உள்ளிட்ட போர்கள், நபிகளார் கடைப்பிடித்த போர் நெறிமுறைகள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 13ஆம் நாள் (மார்ச் 21) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, அய்க்கிய சமாதானப் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|