ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை, 15.03.2019. அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்தின. ஆனால் காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்தது. இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக ஓரளவு சம்மதம் தெரிவித்தது.
தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் பெறப்பட்டு நேற்று இறுதியாக முடிவு ஏற்பட்டது.
அதன்படி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முறைப்படி அறிவித்தார். அதன் விவரம்
மதிமுக - 1. ஈரோடு
விசிக - 1. சிதம்பரம், 2. விழுப்புரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1. மதுரை 2. கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் - 1. நாகை, 2. திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1. ராமநாதபுரம்
ஐஜேகே - 1. பெரம்பலூர்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி- 1. நாமக்கல் தொகுதி.
காங்கிரஸ் - 1. திருவள்ளூர், 2. ஆரணி, 3. திருச்சி, 4. கரூர், 5. சிவகங்கை, 6. கிருஷ்ணகிரி, 7. விருதுநகர், 8. தேனி 9. கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரி
திமுக - 1. தென்சென்னை, 2. மத்திய சென்னை, 3. வடசென்னை, 4. ஸ்ரீ பெரும்பத்தூர், 5. காஞ்சிபுரம் (தனி), 6. அரக்கோணம், 7. வேலூர், 8. திருவண்ணாமலை, 9. சேலம், 10. கடலூர், 11. தர்மபுரி, 12. திண்டுக்கல், 13. கள்ளக்குறிச்சி, 14. மயிலாடுதுறை, 15 .நீலகிரி (தனி), 16. பொள்ளாச்சி, 17. தென்காசி (தனி), 18. தஞ்சாவூர், 19. தூத்துக்குடி, 20. நெல்லை
இவ்வாறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார்.
நன்றி:
தி இந்து தமிழ் நாளிதழ்
|