ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முறைப்படி அறிவித்துள்ளனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள 8 கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் 2 அணிகள் உருவாகியுள்ளன. அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சி களுக்கு தலா 1 என கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
எண்ணிக்கை அடிப்படையிலான தொகுதிப் பங்கீடு முடிந்தாலும், எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. சில தொகுதிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் கேட்டதால் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு நேற்று அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் 17.03.2019. அன்று 09.45 மணிக்கு தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டனர்.
நன்றி:
தி இந்து தமிழ் நாளிதழ்
|