வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் நாளன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பு:-
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத் தேர்தலும் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் நாளன்று தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 03ஆம் நாள் முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. இதை முன்னிட்டு, 10.03.2019. ஞாயிற்றுக் கிழமையன்று 17.00 மணிக்கு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும். ஏழு கட்டத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் 2ஆம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது” என்றார்.
|