ஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகளில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலும் அண்மையில் அக்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகம் – திமுக கட்சியின் சார்பில் தமிழகத்தின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 17.00 மணியளவில் பின்வருமாறு அறிவித்தார்:-
1) 2.சென்னை வடக்கு .. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச்.
2) 3.சென்னை தெற்கு .. முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஏ., எம்பில். பி.எச்டி.,
3). 4. மத்திய சென்னை .. தயாநிதி மாறன், பி.ஏ.,
4) 5.திருப்பெரும்புதூர் .. டி.ஆர்.பாலு, பி.எஸ்சி.,
5) 6.காஞ்சிபுரம் (தனி) .. ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,
6) 7.அரக்கோணம் .. எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி.,
7) 8.வேலூர் .. டி.எம்.கதிர்ஆனந்த், எம்.பி.ஏ., (யூஎஸ்ஏ)
8) 10.தருமபுரி .. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி.,
9) 11.திருவண்ணாமலை .. சி.என். அண்ணாதுரை, பி.காம்.,
10) 14.கள்ளக்குறிச்சி .. டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ்., (ஆர்தோ)
11) 15.சேலம் .. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.ஏ., பி.எல்.,
12) 19.நீலகிரி (தனி) .. ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,
13) 21.பொள்ளாச்சி .. கு. சண்முகசுந்தரம், பி.இ.,
14) 22.திண்டுக்கல் .. ப. வேலுச்சாமி
15) 26.கடலூர் .. டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ், பி.பி.எம்.,
16) 28.மயிலாடுதுறை .. செ. இராமலிங்கம், பி.ஏ.,
17) 30.தஞ்சாவூர் .. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்.,
18) 36.தூத்துக்குடி .. கனிமொழி கருணாநிதி, எம்.ஏ.,
19) 37.தென்காசி (தனி) .. தனுஷ் எம்.குமார், பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்., எல்.எல்.பி.,
20) 38.திருநெல்வேலி .. சா. ஞானதிரவியம்
நன்றி:
தி இந்து தமிழ் நாளிதழ்
இதன் படி, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் – திமுக சார்பில், அதன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மகளான கனிமொழி கருணாநிதி போட்டியிடவுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலும், முதன்மைச் சாலையிலும், நகர திமுக சார்பில் – அதன் செயலாளர் முத்து தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அதிமுக கூட்டணியிலிருந்து – தூத்துக்குடி நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என பேசப்படும் நிலையில், அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அவர் போட்டியிட்டால், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக – அதிமுக கூட்டணிகளின் சார்பில் போட்டியிடும் இருவருமே பெண் வேட்பாளர்களாக இருப்பர்.
|