| |
ஆக்கம் எண் (ID #) 79 | | | வியாழன், பிப்ரவரி 28, 2013 | | மருத்துவர்களே, உங்களை முதலில் குணப்படுத்துங்கள்! சமூகப் பார்வையாளர்
|
| இந்த பக்கம் 3693 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய | |
இக்கட்டுரை சகோதரர் சாளை பஷீர் அவர்களின் மறைந்த சகோதரிக்கு அர்ப்பணம்.
இரண்டு வருடத்திற்கு முன் The Hindu வில் வந்த ஒரு தகவல்.
ஜலதோஷத்திற்கான Tablet Cetirizine 10 மாத்திரைகளின் விலை 1.20 ரூபாய். ஆனால் அதன் பிராண்ட் மாத்திரையான Cetzine 10 மாத்திரைகள் அதே எண்ணிக்கைக்கு 35 ரூபாய்.
வயிற்றுப்போக்கிற்கான Tablet Domperidone 10 மாத்திரைகளின் விலை 1.25 ரூபாய். அதன் பிராண்ட் மாத்திரையான Domstal அதே எண்ணிக்கைக்கு 33 ரூபாய்.
சக்கரை வியாதிக்கான Tablet Glimepiride 10 மாத்திரைகளின் விலை 2 ரூபாய். அதன் பிராண்ட் மாத்திரையான Amaryl அதே எண்ணிக்கைக்கு 125 ரூபாய்.
மலேரியா காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியின் விலை குறைந்தது (3 ஊசிகள்) 25 ரூபாய். அதன் பிராண்ட் வகையில் 3 ஊசிகளுக்கான விலை 300 முதல் 400 ரூபாய்.
இதய நோய் உள்ளவர்களுக்கு அடைப்புகளை நீக்க செலுத்தப்படும் ஊசியான Injection Streptokinase ஒரு ஊசியின் விலை 1000 ரூபாய். ஆனால் அதன் பிராண்ட் ஊசி ஒன்றின் விலை 5000 ரூபாய்.
இன்னின்ன வியாதிகளுக்கு என்னென்ன மாத்திரைகளை எழுதிக் கொடுப்பீர்கள் என மருத்துவத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மேற்கண்ட விலை குறைந்த மாத்திரைகளை பதிலாக வழங்கும் மருத்துவ மாணவர்கள், பிறகு மருத்துவராக ஆனதும் எழுதித் தரும் பிராண்ட் மாத்திரைகள்தான் கூடுதல் விலையில் உள்ள அடுத்த வகை மாத்திரைகள். இக்குறிப்புகளை இந்தி நடிகர் சல்மான் அமீர் கான் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம்.
Physician heal thyself first என ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அதே தலைப்பில் ஒரு கட்டுரை என்றோ ஒரு நாள் தி ஹிந்துவில் படித்த ஞாபகம் உள்ளது. மருத்துவ தொழில் தற்போது மிகவும் ஈவு இறக்கமற்றத் தனமாக மாறிவருவதை ஒரு மருத்துவரே உணர்த்தி எழுதிய கட்டுரை தான் அது.
நோய்களுக்கு வைத்தியம் பார்த்த காலம் போய் தம்மிடம் உள்ள வைத்தியத்திற்கான நோயாளிகளைத் தேடி நிற்கும் மருத்துவர்களே எங்கேயும் எளிதில் தென்படுகிறார்கள். ஒரு சில கிராமங்களைத் தவிர நகரம் பெரு நகரங்களில் பெரிது பெரிதாக முளைத்துக் கொண்டிருக்கும் மருத்துவமனைகள் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.
காசு பணம் என ஒன்றுமே இல்லாவிட்டாலும் கூட அரசு இன்சூரன்ஸ் போட்டிருக்கிறீர்களா எனக் கேட்கும் பண வெறி கொண்ட மருத்துவர்(க்கொலையாளி)கள் மலிந்து விட்டனர். உடல் முழுதும் வலியைச் சுமந்து செல்லும் நோயாளிகளிடம் அரக்கர்கள் போல நடக்கும் செவிலியர்கள் நிலையோ இன்னும் கொடுமை.
பிறக்கும்போதே கை எலும்பில் ஏற்பட்ட ஒழுங்கற்ற நிலையை சரி செய்வதற்காகச் சென்ற என் நண்பர் ஒருவரின் பிஞ்சுக்குழந்தைக்கு நேர்ந்த கதி என்னவெனில் இன்சூரன்ஸ் மூலம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்காக, அவ்வப்போது பரிசோதித்ததை இன்சூரன்ஸ் நிறிவனத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, காட்டு மிராண்டித்தனமாக கட்டுகளை அவிழ்த்த (இல்லை கிளித்த) போது வலிபொறுக்காமல் ஓவென கதறிய அப்பிள்ளை பற்றி அவர் கூறிய போது நம் நெஞ்சையும் வலியுணரச் செய்தது. ஆனால் எங்கே பணம் வராமல் போய்விடுமோ என அஞ்சி அஞ்சி பணி செய்யும் மருத்துவருக்கும் செவிலியருக்கும் மட்டும் அது வெறும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்.
கொஞ்சம் ஆருதலான செய்தி என்னவெனில் நோய்களுக்கு வைத்தியம் பார்ப்போர் இன்றும் சில பகுதிகளில் இருக்கின்றனர். மிகக் குறைவான எண்ணிக்கையில் வயது குறைந்தவர்களும் அதிகமான வயதானோர்களும் அம்மருத்துவர்களுள் அடக்கம். காசு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழித்துக் கொள்ளலாம்; ஆனால் உடல் வீணாகிப் போனபின் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கும் பணக்காரர்கள் சிலரும் கூட உயிர் மேலுள்ள அக்கறையால் இவ்வகை மருத்துவர்களையே நாடிச் செல்கின்றனர்.
நவீன மருத்துவம் பற்றி இவர்கள் கூறுவதைக் கவனியுங்களேன்:
சர் வில்லியம் ஆஸ்லர் சொல்கிறார் : மருந்துகளை உண்ணாதீர்கள் என அறிவுருத்துவதே மருத்துவர்கள் முதலில் செய்ய வேண்டிய தலையாய பணியாகும்.
நெபோலியன் போனொபார்ட் சொல்கிறார் :
மருந்து என்பது (குணமளிக்கும் என்ற அடிப்படையில்) ஒரு தொகுப்பாக நிச்சயமற்ற மருந்துகளை எழுதித் தருவதால், அதன் முடிவென்பது மனிதகுலத்திற்கு நன்மை பயப்பதை விட மிகவும் அபாயாகரமாகவே அமைந்து விடுகிறது.
‘ஆயிரம் பேரை கொன்னாத்தான் அரை வைத்தியன்’ என ஒரு பழமொழி கூறும். பழமொழி பழமையானது. ஆனால் அதன் கருத்து இன்றும் புதுமொழியாகவே உள்ளது.
18-ம் நூற்றாண்டின் அறிஞரான வோல்டேர் சொல்கிறார் :
மருத்துவம் என்பது இயற்கையாகவே குணமாகிவிடுகின்ற நோய்களுக்கு நோயாளிகளிடம் வேடிக்கையாக காட்டப்படும் ஒரு நுட்பமான கலையாகும்.
நவீன மருத்துவம் பற்றிய ஒரு தகவல், அது நோயை குணப்படுத்துகிறது என்பதை விட நோய் எதிர்ப்பு மண்டலத்தை உசுப்பேற்றுவதையே நவீன மருத்துவம் செய்கிறது எனக் கூறுகிறது.
நோய்பற்றிய ஒரு ஆய்வு இவ்வாறு கூறுகிறது : ஒரு செல் மற்றசெல்களுடன் ஒத்திசைந்து இயங்குவது ஆரோக்கியமாகும். இத்தொடர்பு உடையும் போது உருவாவதே நோயாகும். இயற்கை என்பது மனித உடலுக்குள் ஒரு வலுவான பழுதுபார்த்து இயங்கச் செய்யும் பொறிமுறையை கொண்டுள்ளது. புற்றுநோயும் கூட இயற்கையானதே என்கிறது இன்னொரு ஆய்வு.
இவ்வளவு கூற்றுக்கள் நம் முன் இருந்தும் ஊசி போட்டால் தான் நோய் குணமாகும் என்றும் மாத்திரை சாப்பிடாவிட்டால் உடல் தேறாது என்றும் நமது நம்பிக்கையில் அழுத்தமாக இருப்பதால் தான் English Medicine என்ற ஒரே ஒரு முறைக்குள் இவ்வுலகம் அகப்பட்டு சிக்கிச் சின்னா பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதை வாய்ப்பாக்கிக் கொண்டவர்கள் அரை கோடி முதல் ஒரு கோடி வரை அப்படிப்புக்கு பேரம் பேசி படித்து முடித்த கையோடு பலர் மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் காற்றில் பறக்கவிட்டு மனித உடலில் பணம் கொளிக்கும் வருவாயை மேற்கொள்கின்றனர்.
சமீபத்தில் கருத்தரித்த என் உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனை நிலையத்திற்குச் சென்றேன். முதலில் ஸ்கேனுக்கான தொகையை கட்டி ஸ்கேனும் எடுத்து விட்ட பின் அம்மருத்துவர் கரு வளர்ச்சி நன்றாக உள்ளது என்று அனுப்பினார். ஆனால் அவர் அறையை விட்டு வெளியே வந்ததும் மற்றொரு மருத்துவர் எங்களை புன்முருவலோடு அழைத்துச் சென்று அவரது அறையில் அமரச் செய்தார்.
அடுத்து மிகுந்த தொழில்பக்தியோடு எங்களுக்கு ஒரு பாடம் எடுக்கப்பட்டது. ஸ்கேனில் எல்லாம் நன்றாக உள்ளது, ஆனால் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இக்குறிப்பிட்ட வயதினருக்கு 250 பேரில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகலாம் என்றும் 77 பேரில் ஒருவருக்கு அந்த நோய் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது என்றும் இதைச் செய்தால் இத்தனை ஆயிரம் செலவாகும் என்றும் அதைச் செய்தால் அத்தனை ஆயிரம் செலவாகும் எனவும் பாடம் எடுத்து வயிற்றில் கிலியை உண்டாக்கினார். அப்போது அவர் ஒரு அரக்க குணம் கொண்டவர் போன்றே எங்களுக்குத் தென்பட்டார்.
எங்களின் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை செய்து சொல்கிறோம் என்று வெளியேறினோம். அல்லாஹ் எதைத் தந்தாலும் அதை நாம் பெற்றுக் கொள்வோம், அவனிடம் நமக்கு நல்லதைத் தரவேண்டுமென பிரார்த்திக் கொண்டே இருப்போம் என அந்த உரவினருக்கு ஆறுதல் கூறினேன். ஆனால் கூட்டம் கூட்டமாக பலர் அங்கு பரிசோதிக்கப்படுவதைப் பார்க்கும் போது இம்மருத்துவம் எந்தளவுக்கு படிப்பறிவுள்ள இவர்களை அச்சுருத்தி வைத்துள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது.
நோயாளிக்கு PATIENT என ஆங்கிலத்தில் சொல்வார்கள். PATIENCE என்றால் பொறுமை என்பதை நன்றாக விளங்கியே PATIENT என நோயாளிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஒரு வலிப்பு நோயுள்ள பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்காக துஆ செய்யச் சொன்ன போது அப்பெண்ணுக்கு நீர் பொறுமையை கடைபிடித்தால் மறுமையில் மகத்தான கூலியுண்டு என அறிவுறுத்தியதில் பல படிப்பினைகள் உள்ளது. ஆனால் ஒரு சிறு தலை வலிக்கு கூட உடனுக்குடன் மாத்திரைகளை உட்கொள்வதும் தூக்கம் வரவில்லையென மருத்துவரிடமே மாத்திரை கேட்பதும் பொறுமையற்ற ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆறுதல் கூறிய அண்ணலார் (ஸல்) அவர்கள் அது பாவங்களை அழித்து விடுகிறது எனக்கூறினார்கள் என நபிமொழியில் காண்கின்றோம். நோய் ஏற்பட முதற்காரணமே இரத்தத்தில் உள்ள செல்களில் உண்டாகும் அசௌகரியம் தான். நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே தான் சுத்தம் ஈமானில் பாதியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்படியே ஒரு வேளை தீராத நோய்களுக்கு வைத்தியம் செய்யவேண்டி ஏற்பட்டாலும் பக்க விலைவுகள் இல்லாத மாற்றுவகை மருத்துவங்கள் பல உள்ளன.
அல்லாஹ் குர்ஆனையே ஷிஃபா என்கிறான். குர்ஆனில் தேன் பற்றிக் குறிப்பிடுகயில் அது ஷிஃபாவாக உள்ளது என குறிப்பிடுகிறது. ஒரு நபி மொழி மரணத்தைத் தவிர மற்றெல்லா நோய்களுக்கும் கருஞ்சீரகத்தில் குணமுள்ளது என உரைக்கிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படை இதைச் செய்தால் நோய் குணமாகும் என்று எண்ணம் கொள்வதுதான். ஹோமியோபதியின் தந்தையாகிய டாக்டர் சாமுவேல் ஹானிமேன் ‘குணமளிக்கும்’ என்ற நம்பிக்கையில்லாமல் நோய்களுக்கு ஹோமியோபதி முறையை மேற்கொள்ள வேண்டாம் என்கிறார்.
அதனால் தான் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ‘செயல்கள் எல்லாம் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளன’ என்ற நபிமொழியை அவர்கள் தொகுத்த 7000 –க்கும் மேற்பட்ட நபிமொழிகளில் முதலாவதாக முறைப்படித்தினார்கள் போலும். |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|