திசை மாறும் கப்பல்! posted bymuthu ahamed (dubai)[27 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7354
சகோதரர்கள் செய்யத் அஹமத் HK ,சட்னி மீரான் பாய்,
தம்பி ஜைனுல் ஆப்தீன்,நண்பர் சாஹுல்ஹஅமீத் கவனிக்கவும். அஸ்ஸலாமுஅலைக்கும். எல்லோரும் ஒரு
விஷயத்தை தயவுசெய்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சங்கங்களின் அதிகாரபூர்வமான அனுமதியுடன்
இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதா என்ற எனது கேள்விக்கு முறையான பதில் வேண்டும்.
காக்கும் கரங்களின் நகர்ணலப்
பணியிலோ,அந்த தம்பிமார்களின் உழைப்பையோ,மரம்
நடுதல்,ரத்த தானம் இன்னும் அவர்கள் தங்கள் உடலை வருத்தி செய்கின்ற சமூக பணிகளை கொச்சைப்படுத்தும்
அளவுக்கு நான் இல்லை. அதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால் இப்போது நம் முன் உள்ள சப்ஜக்ட்
அது இல்லை.
சட்னி மீரான் காக்காவின் முதல் பதிப்பை
படிக்கவும். நாங்கள் எண்கள் கருத்துக்களை சொன்னோம்.
இன்னும் கூட்டத்திற்கு வராத மற்றவர்களையும் அழைத்து
ஆலோசித்து ஒரு முடிவெடுத்து வேண்டுமானால் இயக்கம்
ஆரம்பிக்கலாம் என்றுதான் எழுதி இருந்தர். நானும் ஊரில்
உள்ள பல்வேறு சங்கங்களில் பொறுப்பில் இருக்கும் நண்பர்களை கேட்ட போது அவர்களும் இதைதான் சொன்னார்கள்.
இப்போது இத்தனை சங்கத்தையும் காக்கும்
கரங்கள் நோன்புதிறக்க அல்லது கலந்துபேச அழைத்ததையோ,ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற
அவர்களின் என்னத்தையோ,அவர்களின் நல்லமுரெயில் செய்த கூட்டத்தையோ குறை சொல்லவே இல்லை. இத்தனை சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டதை மறுக்க வில்லை. எல்லோரையும் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல ஒரு முடிவு காணலாம் என்று நிறைவு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை சங்கமும்
அதிகாரபூர்வமாக இணைந்து செயலாற்ற முடிவு செய்து
இயக்கம் கண்டதுபோல படிப்பவர்க்கு தோற்றம் ஏற்படுத்தும்
ஒரு செய்தியை, வெறும் ஏற்பாடுதான் செய்தோம் என்று
சொல்லும் காக்கும் கரங்கள் வெப்சைட்டில் செய்தியாக
தந்தது ஏன்? மெகா ஆரம்பிக்கப்பட்ட ஓரிருநாட்களில் அவசரம்
அவசரமாக தரப்பட்ட இந்த செய்தியின் பின்னணி என்ன?
இந்த கேள்விக்கு இந்த நிமிஷம் வரை பதில் சொல்லாமல்,
என்னை சமூக நலப்பணிகளுக்கு எதிரானவனாக கருத
வேண்டாம்.
செய்யத் அஹமத் காக்கா அவர்கள் எழுதுனது
போல பல முறை அரசியல்வாதி மற்றும் பணக்காரர்கள்,
தகுதி இல்லாதவர்களால் ஏமாற்றப்பட்ட நமது ஊர் இந்த
முறையும் ஏமாறக்கூடாது என்ற வெறிதான். நான் இத்தோடு
நிறுத்திக்கொள்கிறேன். இன்ஷாஅல்லாஹ்,உண்மைகள் வெல்லும்.
Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட... posted bymuthu ahamed (dubai)[26 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7319
தம்பி. ஜெய்னுல் ஆப்தீன்!
எனக்கு வார்ட் மெம்பெர் ஆகவேண்டுமென்றோ,ஏதாவது
அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ ,எம்.பி ஆகவேண்டுமென்றோ எந்த ஆசையும் இல்லை. கடுங்குளிரிலும்,வெயிலிலும் பாலைவனத்தில் பாடுபட்டு,
என்னால் முடிந்ததை குடும்பத்துக்கும்,ஊருக்கும் செய்வதோடு
சரி! என்னை இயக்குபவன் அந்த அல்லாஹ் ஒருவனே!
ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் எழுதுவதில்லை.
இன்ஷாஅல்லாஹ் சமயம் வரும்போது எல்லாம் வெளிப்படும். உண்மை வெல்லும்.
Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட... posted bymuthu ahamed (dubai)[26 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7302
தம்பி ஜைனுல் ஆப்தீன்! எங்கோ எழுதிய கருத்துக்கு இங்கே
வந்து பதில் எழுதியது ஏனென்று தெரியவில்லை. மரம் நடுவது நகர்ணலப்பணி என்பது எல்லோருக்கும் தெரியு,
நான் கேட்ட கேள்விக்கு மரம் நட்டோம் என்பதுதான் பதிலா?
பத்து சங்கங்களை நோன்பு திறக்க அழைத்துவிட்டு, நகரமன்ற
தேர்தல் குறித்து கருத்து கேட்டபின், இல்லாத இயக்கம் துவங்கப்பட்டதாக வெப்சைட்டுகளுக்கு பொய்யான செய்தி
கொடுத்தது யார்? அல்லாஹ்வுக்காக செய்வதாக சொல்லும்
நீங்கள், அந்த குறிப்பிட்ட சங்கங்களின் ( ஒருசிலரைத் தவிர்த்து) அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் அவர்களால்
இயக்கம் தொடங்கப்பட்டது என்ற பொய்யை கொஞ்சம்கூட
பயம் இல்லாமல் நோன்பு நேரத்தில் பரப்புகிறீர்களே! இதுதான்
அல்லாஹ்வை பயப்படும் லச்சணமா?
அதிகம் வேண்டாம்! கொஞ்சம் பொறுங்கள்! இதன் பின்னநினியில் யார் என்பது விரைவில் உண்மை வெளிவரும். திரை விலகும். நாடகம் முடியும்போது இன்ஷாஅல்லாஹ் வேஷங்கள் களையும். அப்போது தெரியும். அண்ணாதுரை சொன்ன காக்கைகள் யார்
யார் என்று?
ஒரு தவறு செய்தால்...அதை தெரிந்து செய்தால் ... posted bymuthu ahamed (dubai)[26 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7294
காக்கும் கரங்களின் தலைவர் அவர்களே!
கம்பியுட்டரில் இருந்து நான் மொத்தமே இதவரை இரண்டு
கருத்துதான் போட்டிருக்கிறேன்.மக்கள் சேவையில் எனது
அனுபவம் உங்கள் வயதைவிட அதிகம்.
எல்லா அமைப்பையும் கூப்பிட்டு கருத்தை கேட்டுவிட்டு,
மீண்டும் கூடுவோம் என்று சொல்லிவிட்டு,திடீரென
ஒரு இயக்கத்தை துவங்கிவிட்டோம் என்று சொல்வது நியாயமா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்.
மரம் நட்டோம் மரம் நட்டோம் என்றால் அன்ன அர்த்தம்.
இதே வெப்சைட்டில் சட்னிமீரான் காக்கா எழுதி இருந்தாரே!
எங்களை கூப்பிட்டு கருத்து கேட்டார்கள். சொன்னோம்.
அவ்வளவுதான் என்று! அப்போது ஏன் மரம் நட்டிய கதை
சொல்லி பதில் தரவில்லை.
இதன் பின்னணி குறித்த செய்திகளை இறைவன் என்மூலமாகவே ஊருக்கு நிரூபிப்பான்.உண்மை வெளிவரும்போது பலபேருடைய வேஷம் களையும்.அந்த
நாள் வர ரொம்ப தொலைவு ஒன்றும் இல்லை.
Re:‘நகராட்சித் தேர்தல் ஒருங்... posted bymuthu ahamed (dubai)[25 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7255
ஊரில் உள்ள எனது கூட்டாளிகள் பலரோடு பேசும்போது
காக்கும் கரங்கள் காரர்கள் கூட்டத்துக்கு வரசொன்னார்கள்.
நகராட்சி மன்ற தேர்தலில் எப்படி நடப்பது என்று கேட்டார்கள்.
எண்கள் கருத்துகளை சொன்னோம்.அதன்பிறகு அவர்களாகவே எதோ ஒரு இயக்கம் ஆரம்பித்ததாக
படம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏற்கனவே இதைப்பற்றி
சட்னி மீரான் காக்கவும் எழுதி இருந்தார்கள். ஊரில் என்ன
நாடகம் நடக்கிறது? மெகா ஆரம்பித்த சில நாள்களில் ஏன்
இப்படி ஒரு விளையாட்டு? இதன் பின்னணியில் யார் யார்?
ஐக்கிய பேரவை ஏன் கலந்து கொள்ள வில்லை?
எனெக்கென்னவோ மெகா தங்களுடைய பொழப்பை கெடுத்து
விடுமோ என்று தன்னபயத்தில் ஏதோதோ நடப்பது போல
தெரிகிறது.அல்லாஹ்தான் அறிவான்! யாராக இருந்தாலும்
நான் சொல்ல வருவது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
செய்தி: நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சித் தேர்தலை கருத்த... posted byMUTHU AHAMED (DUBAI)[23 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7155
இங்கே சகோதரர் அப்துல் காதர் என்பவரின் கேள்விகளைப்பார்த்து
ஆச்சர்யம் அடைந்தேன்.பிழைப்புக்காக வளைகுடாவில் வாழ்பவர்களுக்கு
வாக்கு ஜனநாயகம் என்பதைக் குறித்து தெரியாதா? அப்படியானால்
கம்னியுஸ்ட் நாட்டில் வாழ்பவர்களுக்கு? என்ன கருத்துங்க இது?
தற்காலிக அமைப்பு என்றால் தேர்தல் முடிந்ததும் வேட்டியை உதறி
விட்டுப் போய் விடுவார்களா? இதே ஒருங்கிணைப்பாளர்கள் CFFC
என்னும் தற்காலிக அமைப்பை உருவாக்கி, பிராக்டிகலாக கேன்சருக்கான
காரணங்களை ஆராய்ந்து,அதன் ரிப்போர்ட்டை அரசுக்கும்,பத்துக்கும்
மேற்பட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களிலும் சமர்ப்பித்து, அந்த
கொடிய நோயை காயலில் இருந்து அகற்ற இன்னும் போராடிக்கொண்டு
இருக்கின்றார்களே! இதில் உங்களைப்போன்று இஷ்டத்திற்கு கேள்விகள்
கேட்கும் நல்லவர்களின் பங்களிப்பு என்ன என்பதை நாங்கள் தெரிந்து
கொள்ளலாமா?
கம்ப்யுட்டரில் உட்கார்ந்துகொண்டு நல்லவர்களை அடையாளம் காட்டப்
போவதாக மெகா அமைப்பு சொல்லவே இல்லையே? நான் உட்பட பலர்
எங்களுடைய பெயரைப் பதிவு செய்து, நல்லது நடக்கவேண்டும் என்ற ஆசையில்
ஊருக்குப் போய் இதற்கான பணிகளை ஆற்ற துடித்துக்கொண்டிருக்கிறோமே!
சும்மா இருந்து கொண்டு இஷ்டத்துக்கு ஏதாவது எழுதி எங்க மனச
புண்படுத்தாதீங்க!
நீங்கள் தரும் ஆலோசன தப்பகிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று
நெகடிவா கேட்கும் நீங்க,சுனாமி வீடு பிரச்சினைலே மக்களை தவறா
வழிநடத்திய, தவறான துணைத் தலைவரை தேர்ந்தெடுத்த ஐய்க்கியப்
பேரவைக்கு ஒரு கடிதம் எழுதி கேட்க வேண்டியதுதானே?
உங்களைப் போல கேள்வி மேல கேள்வி கேட்டு, நல்லது செய்றவங்கள
திசை திருப்புரவர்கள் இருக்கும்வர பேதிமாத்திர என்ன அனஸ்தீசியாவே
கொடுப்பாங்க! ஆணா இந்தமுற அது நடக்காது!
சாக்கட சாக்கட என்று சும்மா கூச்சல் போடுறத விட்டுட்டு எங்களோட
வாங்க! நல்லது நடக்க ஏதாவது உருப்படியா செய்யலாம்! முடிஞ்சா
ஊருக்குப் போய் செய்யலாம்! இல்லேன்னா குறைந்தபட்சம் இன்டர்நெட்,
வீடியோ கான்பரன்ஸ் எதுமூலமாகவும் செய்யலாம்!
அனைத்து தோழர்களுக்கும் நான் சொல்லவருவது அடுத்தது என்னன்னு
மெகா சொல்றவரைக்கும் பொறுங்க! தயவுசெய்து நீங்களாகவே அப்படி
இப்படின்னு இஷ்டத்திற்கு எழுதி காரியத்த கெடுக்காதீங்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross