வேகத்தடை..நினையூட்டல் posted byMohamed Adam Sultan (kayal patnam)[25 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18506
மக்கள் குறை தீர்க்கும் முதல் கூட்டத்திலேயே அலியார் தெரு மக்கள் சார்பாக ,ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி அருகிலுள்ள நான்குதிசைவழிசெல்லும்சந்திப்பில்வேகத்தடைஅமைத்துதரும்படிவிண்ணப்பித்திருந்தேன்.
விண்ணப்பித்த அடுத்த நாளே அச்சந்திப்பில் இரு வாகன விபத்துக்கள் நடைபெற்றன ..ஒரு விபத்து சற்று அபாயகரமாகவே அமைந்தது.
அல்லாஹ் காப்பாற்றினான். உயிருக்கும் உடலுக்கும் பெரும் சேதமில்லாமல் தப்பித்தார்கள்.
இதை அறிந்தும் , அந்த வார்டு உறுப்பினர் முதல் நகராட்சி வரை உடனடியாக வேகத்தடை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இன்று வரை இல்லை.
ஊரில் ஒன்றிரண்டை தவிர அனைத்து தெருவிலுள்ள அனைத்து வேகத்தடைகளும், அதிகாரிகளின் ஆணையும், அனுமதியும் பெறாமல் அவரவர் விருப்பபடி முறையற்ற முறையில் வேகத்தடை அமைத்திருக்கிறார்கள்.
இதில் சில வேகத்தடை, வேகத்தை குறைப்பது போல் அல்ல, உயிரை பறிப்பது போல் அமைந்து இருக்கிறது. .
இப்படிப்பட்ட முறையற்ற வழியை பின்பற்ற கூடிய சூழ்நிலையைத்தான் நமதூரின் பெரும் பகுதியில் பார்க்க முடிகிறது. .
இப்படிப்பட்ட வழியை நானும் பின்பற்றினால் விதிகளுக்கும் ஒழுக்கத்திற்கும் முரணாக நடக்கும் அவர்களுக்கும் எனக்கும் வித்யாசம் தெரியாமல் ஆகிவிடும்
ஆகவே ,நகராட்சியில் இத்துறை சம்பத்தப்பட்டவர்கள் என்னுடைய அணுகுமுறையை புரிந்துகொண்டு
நினையூட்டல் விண்ணப்பதிற்கு வேலை வைக்காமல்
இம்மக்கள் மன்றத்தில் நான் தரும் இந்த விளக்கத்தையே நினயூட்டலாக எடுத்து கொண்டு உடனடியாக வேகத்தடை அமைத்து தருமாறு வேண்டுகிறேன் .அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
செய்தி: அடிப்படை வசதிக் குறைவுகளுக்கு தீர்வு கோரி பாஸ் நகர் பொதுமக்கள் உண்ணா நோன்பு! குளிர்பானம் கொடுத்து நகர்மன்றத் தலைவர் நிறைவுபடுத்தினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அடிப்படை வசதிக் குறைவுகளு... posted byMohamed Adam Sultan (kayal patnam)[23 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18422
புறநகர் ஓட்டால்தான் ஆபிதா அவர்கள் வெற்றிபெற்றார், ஆகவே புறநகருக்கு முதலில் வசதிகள் செய்துகொடுத்த பின்னர்தான் மிச்சமீதி கவனத்தை ஊர்பக்கம் மாற்றான் பிள்ளையை பார்ப்பதுபோல் பாவிப்பார் என்ற பொய் குற்றச்சாட்டை பொடியாக்கி இருக்கிறது இவ் உண்ணாவிரத செய்தி.
முதன் முதலில் உண்ணாவிரத போராட்டம் புறப்படுவதே புறநகர்பகுதியில் இருந்துதான்.
வீண் பழி வெகுதூரம் பயணிப்பதில்லை
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்
Re:நகராட்சிக்கு புதிய கட்டிட... posted byMohamed Adam Sultan (kayal patnam)[22 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18412
படம்பார்த்து கதை சொல் என்று சின்னபிள்ளைகளுக்கு புரியும்படி விளக்குவோமே,அதுபோல் நகரட்சியையே நம் முன்னால் நிறுத்தி நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தந்த, தகவல் துறை சிங்கம் kayalpatnam .com க்கு என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்!
உண்மையை உரித்து காட்டிஇருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் தூயபணி .உண்மைபணிக்கு உங்களுடன் ஒத்துழைக்க என்போன்ற ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். keep it up.
இதுவரை நேர்மையாக பணியற்றிகொண்டிருக்கும் ஒரு வார்டு உறுப்பினரை பார்த்து ,பொருளை கையில் எடுத்து சென்றீர்கள் என்ற,அபாண்டகுற்றச்சாட்டை, ஆதாரமில்லாமல் கூற, அவர் எதிர் சவால் விட்டவுடன் அந்த நிமிடமே அவுட்டாகி அவமானமடைந்து அமர்கின்ற அருமையான காட்சிகளை காணக்கூடிய பாக்கியத்தை பெற்றுள்ளோம்!.
இப்படியே இந்த நகராட்சி சென்றால் பெரும்பாலோர் போய் விடுவார்கள் என்றவுடன்,
பொறுப்பாக பணிபுரிந்து பணிக்கூலியை மட்டும் பெரும் நல்லவர்கள் மட்டும் இருந்தால் போதும் என்ற நெத்தியடிபதிலால் பேதலித்தவர், எப்படி போனாலும் கேட்டை போட்டு விடுகிறார்களே என்ற எரிச்சலை அவரின் புகைபடம் அப்பட்டமாக சொல்லாமல் சொல்லியது.
என்னதான் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கவனித்தாலும், கடப்பாறையை விழுங்கி கசாயம் குடிக்கும் கைதேர்ந்தவர்களின் கதை சில நேரங்களில் அரங்கேறி விடுகிறது.
அந்த அவல நிலை அகல,அத்தீய கரைபடியாவண்ணம்,படராவண்ணம் அல்லாஹ் காப்பாற்றுவானாக.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross