எல்லாவரும் தகுதியானவர்களே!!! posted byஹைதுரூஸ்ஆதில் (கோழிக்கோடு - கேரளா .)[26 February 2016] IP: 64.*.*.* United States | Comment Reference Number: 43225
ஆம், எல்லாவரும் தகுதியானவர்களே,
உலக காயல் நல மன்றங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான ஒரு நல மன்றமே Malabar Kayal Welfare Association (MKWA)மக்வா!
எந்த இழி சொல்லும் வந்து விட கூடாது என்பதற்காகவே உறுப்பினர்கள் சேர்ந்து செயற்குழு உறுபினர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்தை அறிமுகபடுத்தியது மக்வா!
குறிப்பிட்ட ஒரு மதத்தவர்கள் அதிகமாக கூடி விட்டாலே அது தீவிரவாதம் தானோ என்று சிலர் யோசிக்கின்ற காலத்தில், நம்மவர்களும் பயந்து பயந்து இருந்த நேரத்தில், நாம் நன்மைக்காக வேண்டி மதம், சாதிகள் கடந்து "ஊர் மக்கள்" என்ற அடிப்படையில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம், என்பதை பற்றி ஆரம்ப கால உறுப்பினர்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்து, அவர்களின் அச்சப்பாடுகளை துவக்கத்திலேயே களைந்து, எந்த சட்ட பிரச்சினையும் அரசு தரப்பில் இருந்து வந்து விடக்கூடாது என்பதற்காக முறைப்படி அரசுப் பதிவும் செய்து, பதிவு எண்ணையும் பெற்றது மக்வா !
தேர்தல் மூலம் தான் என்றாலும் எப்பவும் ஒரே கமிட்டியே வந்து விடக் கூடாது, அப்படி வந்தால் அதுவும் ஒரு ஆதிக்க சக்தியாக ஆகிவிடும், மக்வா என்றாலே இன்ன இன்னவர்கள் தான் என்ற எண்ணம் உலக காயல் நல மன்றங்கள் மத்தியிலும், இணைய தள நண்பர்கள் மத்தியிலும், குறிப்பாக பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டு விடக்கூடாது, அதன் மூலம் ஒரு பெறுமையும் வரக்கூடாது என்பதற்காகவும், நாம் நின்றால் நம்மையே உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து விடக்கூடும் என்று எண்ணி கடந்த தேர்தலிலும், நடக்கவுள்ள தேர்தலிலும் நாம் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
நம்முடைய ஹாஜத்தெல்லாம் நாம் மேற்கூறிய அடிப்படையில் "ஊர் மக்கள்" என்ற அடிப்படையில் புதுசு புதுசாக மக்வாவில் சேரும் புதிய உறுப்பினர்கள் வரைக்கும் எல்லா வரும் ஒரு முறையாவது பொறுப்பில் வர வேண்டும் என்பதே ஆகும்.
அதற்காக வேண்டி இப்போது நடக்கவுள்ள தேர்தலில் நிறைய நல்ல உள்ளங்கள் (கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) வேட்புமனு கொடுக்க வில்லை. அவர்களை நான் மனமாற பாராட்டுகிறேன். அவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிட்டால் கூட நிச்சயம் அவர்களே தான் வருவார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இவர்களின் இந்த வழியை பின்பற்றி பழையவர்கள் ஒரு தடவை பொருப்புகளில் இருந்தோமா,
அல்ஹம்துலில்லாஹ் இனி புதியவர்களுக்கு வழி மாறி கொடுப்போம் என்ற உயர்ந்த எண்ணத்தை கை கொண்டிருந்தால், மனு வாபஸ் பெறும் நாளில் வேட்புமனு கொடுத்த பல புதியவர்களும் வேட்பு மனுவை வாபஸ் வாங்காமல் தேர்தலை எதிர் கொண்டு பொருப்பில் வருவதற்கு வாய்ப்பாக அமைந்து அவர்களின் திறமையின் கீழும் ஒரு முறை நிர்வாகம் நடந்திருக்க வாய்ப்பு இருந்தது.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களிலாவது பழையவர்கள் புதியவர்களுக்கு வழி விடுவார்கள் என நம்புவோம், அதற்கு இறைவன் நாடுவானாக.
அன்புடன்,
ஹைதுரூஸ்ஆதில்,
MKWA வின் நிறுவன செயலாளர்.
செய்தி: வாழ்வியல், மாடித்தோட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட கத்தர் கா.ந.மன்ற செயற்குழு முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல் நல மன்றங்கள் சுயமாக செயல் படுங்கள். posted byஹைதுரூஸ்ஆதில் (கோழிக்கோடு- கேரளா)[22 March 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 39774
இயற்க்கை உணவு பழக்கத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் ஊர் மக்களை திரும்ப அழைக்கும் கத்தார் காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துக்கள்.
சகோதரர் பாஸ்கர் ஊர் வரும்போது நம்ம ஊர் மக்கள் எல்லாவரும் அதில் கலந்து கொண்டு, அவருடைய ஆலோசனையை நல்லபடியாக செவிகொண்டு அதன்படி அன்றாட வாழ்க்கை ரீதியை அமைத்து கொண்டு நோயற்ற ஆரோக்ய வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
இதுபோலுள்ள மக்களுக்கு பிரயோசனமான கார்யங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மற்ற மன்றங்களும் சுதந்திரமாக ஆலோசிக்கவும் அதை நல்லமுறையில் நடைமுறை படுத்தவும் அன்புடன் வேண்டுகிறேன்.
செய்தி: குடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இப்படி தீராத பிரச்சினையே இல்லை. posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[13 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15898
அல்ஹம்துலில்லாஹ்.
என்ன பிரச்சினையானாலும் முறைப்படி பேசினால் அந்த பிரச்சினை சுமூகமாக முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஜமால் மாமா குடும்பத்தினருக்கு அல்லாஹு இதற்க்கான நற்கூலியை கொடுப்பானாக.
மேலும் அவர்களே கூறியுள்ளது போல:-
~~~~பல்வேறு நற்காரியங்களுக்காக பல தான-தர்மங்களைச் செய்த தமது முன்னோர்களைப் பின்பற்றி தாமும் இயன்றளவு செய்யவே ஆவலுறுவதாகவும்...~~~
இப்படி இன்னும் பல உதவிகள் செய்யவும் அல்லாஹு அருள் புரிவானாக.
செய்தி: வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம்! ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தலைவரை ஒருவன் இயக்குகிறான்! posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[13 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15884
இப்படி திறந்த புத்தகமாக இருக்க நினைக்கும் உங்களை பார்த்து இப்பவும் காயல் மகபூப் சொல்கிறார்:-
"இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்"
அவருடைய ஆதங்கம் சரிதானே? ஆனால் சிலர் அல்ல எல்லாம் வல்ல அல்லாஹு அல்லவா உங்களை இயக்கி கொண்டிருக்கிறான்.
அதைப்போல இப்படி எல்லோரையும் கலந்தாலோசனை செய்வதும் ஆலோசனைகளை பெறுவதற்காக கூட்டம் போடுவதும் தான் அவருக்கு மூடகமாகவும் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவும் நினைக்கிராரோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross