Re:நகர்மன்றத் தலைவர் ஆபிதா ந... posted bymackie noohuthambi (kayalpatnam)[13 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13303
நீங்கள் சென்ற தெருக்களில் எல்லாம் உங்களை தாய்மார்கள் அன்புடன் வரவேற்றதை பார்த்தேன். இவர்கள் கண்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சாதரணமாக தெரியவில்லை. மெகா கூட்டத்திலே தம்பி ரிபாய் அள்ளிவிட்ட அவலநிலைகளை பார்க்கும்போது அவற்றை சரிசெய்ய ஐந்து வருடங்கள் போதாது என்று நினைக்கிறேன்.
நீங்கள் சென்ற பாதைகளில் வேகத்தடைகளை பார்த்திருப்பீர்கள்,.இவை விவேகதடைகள். மெதுவாக பயணிக்க வேண்டும் என்று வாகனங்களுக்காக போடப்பட்டவை. ஆனால் அவை அளவுக்கு மீறி உயரமாக போடப்பட்டிருப்படால் சாதாரணமாக நடந்து செல்பவர்களும் கால் தடுக்கி விழுந்து விடும் நிகழ்ச்சி சாதாரணமாக நடக்கிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு சிலவேளை அதுவே உயிரைப்பறிக்கும் அமரராக மாறிவிடுகிறது. உடனடியாக அதில் கவனம் செலுத்தி மற்ற நகரங்களில் எவ்வளவு அருமையாக, டேப்பராக அமைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்து உடன் சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
தலைவருடன் தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்றினை உடனடியாக மக்களுக்கு அறியத்தாருங்கள். தங்கள் உள்ளக்கிடக்கைகளை கொட்டி தீர்க்க நிறைய பேர் ஆவலாக உள்ளார்கள். அலுவலகத்துக்கு வருவதற்கு நேரம் காலம் ஒத்து வராது. இந்த கணினி யுகத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. எனவே மக்களை சந்திக்க வாரம் ஒரு முறை உங்கள் அலுவலகத்தில் நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மக்கள் குறை தீர்க்க அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரசன்னமாகி இருக்க சொல்லுங்கள்.
ROME IS NOT BUILT IN A DAY. BUT YOU HAVE TO ACT FAST, TIME AND TIDE WAIT FOR NO MAN. PLEASE DO THE NEEDFUL SOON. PEOPLE DO NOT WANT EXCUSES, THEY WANT RESULTS. REGARDS MAKKI NOOHUTHAMBI 9865263588
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[05 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9698
ஜலாலி காக்கா U R REALLY GREAT .
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுதப்படாத கற்பூரமாக உங்களை ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்துக்கொள்ள முடியாது. 87 பேர் போட்டி.
18 உறுப்பினர் பதவிக்கு. எச்சிலை தன்னிலே எறியும் சோத்துக்கு பிச்சைக்காரன் சண்டை ரோட்டிலே, இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனையோ இந்த நாட்டிலே என்று 1953 லே பாடிய பராசக்தி வசனங்கள் இன்றும் உண்மையாக இருக்கிறது. நீங்கள் உதவும் கரங்களாகவே இருங்கள்.
அடுத்த முறையும் நீங்கள் நிற்க வேண்டாம். நீங்கள் சட்டமன்றம் சென்று நமதூருக்கு சேவை செய்யும் வாய்ப்பை அல்லா தருவான். உங்களை நேரில் சந்தித்து எனது நல வாழ்த்துக்களை தெரிவிக்கவிரும்புகிறேன். உங்கள் தொலைபேசி நம்பரை எனக்கு அறியத்தாருங்கள்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[01 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9238
அன்பு சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வேண்டுகோளை இணையதளத்தில் பார்த்தேன். அல்லா நாடியவர்களுக்கே அவன் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறான் எனபதுதான் சத்தியமானது. சாத்தியமானது.
இரண்டு கண்களில் எந்த கண் முக்கியம் என்று யார் சொல்லமுடியும். போட்டியில்லாமல் நடக்க வேண்டிய தேர்தல் இப்படி மாறிவிட்டதே என்று வேதனயாக் உள்ளது வெற்றி தோல்விகளை அல்லாஹ்வே நிர்ணயிப்பான்.
நீங்கள் நகராட்சி தலைவியாக தேர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் நீங்கள் இந்த ஊருக்கே முன் மாதிரியாக இருந்து ஜனநாயக வழியில் கடமையாற்றினால் எல்லோருடனும் கலந்து ஆலோசிக்கும் மஷூரா முறையை கடைபிடித்தால் அதில் வஹீயுடைய பரக்கத்தை காண்பீர்கள்.
போட்டியிலிருந்து விலகிக்கொள்ளும்படி சில சகோதரர்கள் உங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்தால் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நபிகள் நாயகம் விட்டுக்கொடுத்ததால் பின்னர் அவர்கள் பெற்ற பெரும் வெற்றியை நீங்கள் இருவரும் பெறலாம். யார் முந்துகிறார்களோ அவர்களுக்கே சுப சோபனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross