செய்தி: 20 ஆண்டுகால சேவையில் காயல்பட்டணம்.காம்: தேர்ந்தெடுக்கப்பட்ட ‘எழுத்து மேடை’ கட்டுரைகளை சிறப்பு நூலாகத் தொகுத்து வெளியிட முயற்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.S. Abdul Hameed (Dubai)[29 April 2018] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46155
நல்ல முயற்சி. பாராட்டுகள். அல்லாஹ் உங்கள் முயற்சியை வெற்றியாக்கித் தருவானாக!
நெஞ்சோரம் ஈரம்...! posted byM.S. அப்துல் ஹமீத் (Dubai)[07 September 2016] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44600
“என் நெஞ்சோரத்து தேவதைகள்” என் நெஞ்சோரம் ஈரத்தை வரவழைத்து விட்டது.
கட்டுரையைப் படிக்கப் படிக்க என் பள்ளி நினைவுகள் அலையாடத் தொடங்கி விட்டன. கட்டுரையாசிரியர் ஒவ்வொரு டீச்சராக தனது அனுபவங்களைப் பகிரப் பகிர நான் படித்த எல்கே துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளியில் அதேபோன்ற என் அனுபவங்கள் என் நெஞ்சில் நிழலாடத் துவங்கிவிட்டன. அந்த ஆசிரியர்களில் பலர் இன்று நம்முடன் இல்லை.
கடைசி வரை கட்டிப் போட்டது கட்டுரையாசிரியரின் எழுத்து வன்மை. நாவன்மையும், எழுத்து வன்மையும் ஒருங்கே பெற்ற அரிய நங்கையருள் ஒருவர் அவர்.
சமுதாயத்தில் ஆற்றல் மிக்கவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆற்றல்களை வெளிப்படுத்துபவர்கள்தான் உண்மையான ஆற்றல் மிக்கவர்கள்.
அந்த வகையில் கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் அளித்துள்எள எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் சமுதாய நலனுக்காக அவர் பயன்படுத்தி வருகிறார்.
அல்லாஹ் அவருக்கு மென்மேலும் ஆற்றல்களை அளித்து இன்னும் அதிகமதிகம் படைப்புகளைத் தந்து சமுதாயத்திற்கு நலம் பயக்க வைப்பானாக!
துள்ளி விளையாடிய பள்ளி நாட்களை எண்ணும்பொழுது ஒரு பக்கம் மகிழ்ச்சியும், ஏக்கமும் வந்தாலும் மறுபக்கம் அந்த நாட்களையெல்லாம் தாண்டி வந்து விட்டோமே... மரணம் நம்மை நெருங்கி வருகிறதே என்று தூக்கமும் கலைகிறது.
நமது பங்கு என்ன? posted byM.S. அப்துல் ஹமீது (Dubai)[29 April 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40266
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு என் நண்பர் குழாம் ஒன்று சென்றிருந்தது. அந்தப் பகுதி மக்களின் வாழ்வு நிலை குறித்து அறிவதற்கான பயணம் இது.
ஒரு கிராமத்திற்குள் நுழையும்பொழுது மாலைப் பொழுது மங்கிய நேரம். என் நண்பர்கள் வருகை அறிந்து அந்தக் கிராம மக்கள் ஒரு சிறிய எளிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கிராமம் முழுவதும் திரளாக வந்து காத்திருந்தனர்.
மின்சாரம் என்ற வாசனையே அறியாத கிராமம். பொழுது சரிந்ததால் வெளிச்சத்திற்கு மண்ணெண்ணை விளக்குகள் எரிந்தன மேடையில். எளிய நிகழ்ச்சி முடிந்து மக்களுடன் அளவளாவும்பொழுது, “உங்கள் கிராமத்திற்கு மின்சாரமே இல்லையா?” என்று என் நண்பர்கள் அந்த மக்களிடம் கேட்டனர்.
“ஓ இருக்கிறதே...” என்று ஒரு திசையில் கை நீட்டி காண்பித்தார்களாம். அங்கே தூரத்தில் அந்தக் கிராமத்து எல்லையில் மின் கம்பிகள் கம்பீரமாக வீற்றிருந்தன.
//அவர்கள் தங்கும் கொட்டாயில் மின்வசதி இல்லை. அந்தப் பண்ணைக்கு மிக அருகிலேயே உலோக நட்டுவாக்காலிகள் போன்ற கோபுரங்களின் தலை வழியே விரல் ரேகைகள் போல தொய்ந்து நீளும் மின் கம்பிகள் பல மெகாவாட் மின்சக்தியை சுமந்து செல்கின்றன.//
கட்டுரையாளர் சாளை பஷீரின் அவருக்கே உரிய உதாரணத்தைச் சொல்லும் பாங்குடன் கூடிய இந்த அழகிய வரிகளைப் படித்தவுடன் எனக்கு மேற்சொன்ன நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது.
இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் அடியோடு இல்லாத அவலங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. என் நண்பர் குழுவை ஏதோ சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று எண்ணி அந்தக் கிராம மக்கள் தங்களுக்குள்ள குறைகளைத் தீர்த்துத் தருமாறு விண்ணப்பிக்கத் தொடங்கி சூழ்ந்து கொண்டார்களாம்.
ஒரு பக்கம் கார்ப்பரேட் காரியவாதிகளின் தன்னல ஆதாய சுரண்டல் என்றால் மறுபக்கம் இந்த மக்கள் சொந்த மண்ணிலேயே அன்னியர்கள் என்றும், மதத்தை மனதில் வைத்து புறக்கணிக்கப்படும் கொடுமையான சூழல்.
இயற்கையைக் காப்பாற்ற வேண்டியதுதான். இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதுதான். ஆனால் அவர்களின் வாழ்வையே குறி வைக்கும் நச்சுப் பாம்புகளை என்ன செய்வது? அவர்களது வாழ்வாதாரங்களைப் பாதுக்காக்க நாம் என்ன செய்கின்றோம்? அவர்களது இயற்கை செழுமை மாற்றப்படாமல் அவர்களது வாழ்வு நிலையை மேலோங்கச் செய்வதற்கு நமது பங்களிப்பு என்ன?
என் எழுத்தாள நண்பர் சாளை பஷீரின் அருமையான படைப்புகளுள் ஒன்று இது. ஆழமான கட்டுரை. இந்தக் கட்டுரையைப் படித்து ஆதங்கப்படுவதோடு நின்று விடாமல் நமது பங்களிப்பைக் குறித்து சிந்திக்க வேண்டும். நமது மார்க்கம் அதற்கு முழுமையான வழிகாட்டுதலையும் தந்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross