Re:சாயம் வெளுத்துப் போச்சு! ... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13859
யாருக்கும் வெட்கமில்லை.
நமது மாநில அரசு மின்வாரியம், வடிகால் வாரியம், குடிநீர் வாரியம் பால் வாரியம் போக்குவரத்து வாரியம் இன்னபல வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று முதல்வர் சொல்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய பாக்கிகள் பற்றி தினமணியில் விலாவாரியாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. ஊழல் ஒருபுறம், இப்படி பாக்கிகள் ஒருபுறம்.
நாம்தான் வாங்கிய பொருள்களுக்கு உடனடியாக பணம்கொடுக்காவிட்டால் மானம் மரியாதை போய்விடும் என்றும் கவலைப்படுகிறோம். ஒருநாள் தவறினால் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகிறோம்.
இத்தனை லட்சம் டாலர்களை கடன்பாக்கி வைத்து விட்டு எப்படி கப்பல் ஓட்டுகிறார்கள்? அந்த எரிபொருள் கம்பெனி எப்படி கடன் கொடுத்தது, கப்பலில் போனால் தலை சுற்றுமா என்று என்னிடம் கேட்டவர்களுக்கு நீங்கள் சாப்பிட்டுவிட்டு படுத்தால் தலை சுற்றாது என்று சொன்னேன். இப்போது இவ்வளவு கடன்வைத்து விட்டு கப்பல் புறப்பட்டால் கப்பலே சுற்றிவிடுமே,
Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ... posted bymackie noohuthambi (kayalpatnam)[23 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13720
சகோதரர் லுக்மான் அவர்கள் எப்போதும் முன்னிலைதான். தேர்தல் அறிக்கைவிடுக்கும்போது, தான் தேர்ந்தேடுக்கப்பட்டால் என்ன செய்வேன் என்ன செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தனது நிலைப்பாட்டை முதன்முதலில் சொன்னவர் அவர்தான்.
துளிர் கேளரங்கில் நடைபெற்ற உறுப்பினர்கள் அறிமுக விழாவில் சகோதரி ஆபிதாவிடம் நான் ஒரு கடிதம் கொடுதேன்.
நகரமன்ற தலைவர் மின்னஞ்சல், நகரமன்ற மின்னஞ்சல், நகரமன்ற இணையத்தளம் உடனடியாக மக்களுக்கு அறியத்தரவேண்டும், மாதம் இருமுறை நகரமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேட்க ஒரு நேரத்தை, ஒரு நாளை ஒதுக்கி ஒரு இடத்தில மக்களுக்காக காத்திருக்க வேண்டும், நகரமன்ற தலைவி அவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறந்தவெளியில் கூட்டம் போட்டு நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அவை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லை என்றால் அதற்கு என்ன காரணம், மக்கள் அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்றவற்றை மக்கள் முன் எடுத்து சொன்னால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஒத்துழைப்புதர உதவியாக இருக்கும் என்று நீண்ட கோரிக்கை கொடுத்தேன்.
தலைவர் அதை கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. சகோதரர் லுக்மானை தொடர்ந்து எல்லோரும் இந்த தகவல்களை தருவார்கள் என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டுள்ளது. என்றாலும் நகரமன்ற தலைவர், துணை தலைவர் இதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
அதே சமயம் விமர்சனம் எழுதுபவர்கள் நாகரிகமாகவும் ஆக்கப்பூர்வமான யோசனைகளாகவும் சொல்லுங்கள். தனிமனித உணர்வுகள் காயப்படாமல் உங்கள் கருத்துகளை வெளியிடும்படியும் வேண்டிகொள்கிறேன். நன்றி,
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8856
ஷமீமுல் இஸ்லாம் உங்கள் சகோதரர். ஆனால் நசீமுல் இஸ்லாம் என்ற உங்களின் பெயர் இப்போதுதான் வெளிவந்துள்ளது. மறைந்திருந்த உங்கள் பெயர் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதுபோல் உங்களுக்குள்ளே மறைந்துள்ள திறமைகளும் வெளிச்சத்துக்கு வர நீங்கள் நகரமன்ற உறுப்பினராக வர அல்லா அருள்புரிவானாக.
சொந்தக்காரர்கள் எனக்கு ரொம்பப்பேருங்க. நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பைதானுங்க என்ற பாடல் வரிக்கு ஏற்ப நீங்கள் எல்லோருடனும் அன்பு பாராட்டி பழகுவதால் உங்களை தேர்ந்தேடுக்கவிருக்கும் உங்கள் வார்ட் மக்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross