செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byபா.மு.ஜலாலி (Kayalpatnam)[04 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26696
”இந்த மாமனிதரை’ நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் ”விட்டில் புச்சி மாதிரி வலிய வந்து அவமானத்தை” தேடிக்கொள்ள இவரைவிட்டால் யார் இருக்கிறார்கள்?
நமது அவா நமதூர் நகரசபை தலைவி ஆபிதா ஷேக் அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் நமதூர் அனைத்து மக்கள் மற்றும் சுற்று வட்டார சிறுபான்மை மற்றும் அனைவரின் ஆதரவையும் பெற்று வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற பாடுபட வேண்டும்.
தலைவி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். எம் போன்ற நடுநிலையாளர்களின் ஆதரவை எல்லா காலங்களிலும் தக்க வைத்து கொள்ள முன்வர வேண்டும்.
ஆதரவாளர்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்பாளர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த எதிர்பாளர்களின் ஆதரவை பெறுவதில் தீவிர முனைப்பு காட்டவேண்டும். அந்த தருணத்தில் வெற்றி நமதே!
ஆபிதாவின் நிலையான ஆட்சிக்கு வாழ்த்துக்கள்!
தனிமனித ஆதிக்கம் அழியட்டும்!!
ஊர் நலம்பெற இதர 17 உறுப்பினர்களை எவ்வாறு தகுதி இழக்க செய்வது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. புனைக்கு யார் மணி கட்டுவார்கள். நாமாகவே இருப்போம்.
மக்கள் சேவையில்
பா.மு.ஜலாலி
மக்கள் சேவா கரங்கள்
காயல்பட்டணம்.
செல் 94866 37576
Re:... posted byPalappa Jalali (Kayalpatnam)[20 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24661
யாரிடம் ரீல் விடுகின்றார்கள் இவர்கள்?
நகர்மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாற்றாக எந்த நகர்மன்ற தலைவராவது மினிட் புத்தகத்தில் எழுத முடியுமா?
இதென்ன பால் கணக்கு புத்தகமா? அரை லிட்டர் கால் லிட்டர் கூடியது, குறைந்தது என்று எழுதுவதற்கு.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எந்த ஒரு தீர்மானமோ, மினிட் புத்தகமோ நகர்மன்ற ஆணையர் பார்வைக்கும் ஆர்டிஎம்ஏ பார்வைக்கும் உட்பட்டதே. மேலும் இதன் பின்னர் மானிட்டரிங் கமிட்டி வேறு ஆய்வு செய்யும்.
எவ்வளவு கவனமாக கையாள வேண்டியது மினிட் புத்தகம். நமது நகர்மன்ற தலைவி மீது இந்த விசயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.
அப்படி மினிட் புத்தகத்தை சரிபார்க்க வரும்போது எவ்வித குறையும் இல்லை என்று மானிட்டரிங் கமிட்டி முடிவு செய்யும்போது இவர்களின் நடவடிக்கை கோரிக்கை புஜ்ஜியமாகிவிடும். இதுதான் நடக்கப்போகிறது.
காயல்பட்டண நகர் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யும் நகர்மன்றத்தின் பொன்னான கூட்ட நேரங்கள் வீணடிக்கப்படுகின்றன. இந்த அம்புகள் எப்போதுதான் உணர்வார்களோ தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றவர்களில் மறைந்திருக்கும் நபர் கேட்டார். ஒரு ”ம” வும் பிடுங்க முடியாது. எந்த கோர்ட்டுக்கு போனாலும் மீடியா மன்றத்திற்குள் நுழைய முடியாது என்று தெனாவெட்டாக கூறினார். பாவம் அதனால்தான் என்னவோ வெட்கப்பட்டு புகைப்படத்தில் முகம் காட்டவில்லையோ? என நினைக்க தோன்றுகிறது.
இதில் ஓர் விசயம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நகர்மன்ற தலைவிதான் அவமானப்படுத்தப்பட்டதை அடுத்து அவராக முந்திக்கொண்டு புகார் மனு அளித்திருக்கலாம். அவர் அதை கையாளத் தவறியதால் இந்த நபர்கள் முந்திக் கொண்டார்கள்.
இந்த நடவடிக்கை கோரிக்கை மனுவில் எதுவும் நடக்கபோவதில்லை. அதை விடுத்து நகர்மன்ற நடவடிக்கைகளில் தலைவியுடன் ஒத்துழைத்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவ வேண்டும். இல்லாவிட்டால் ”ஆப்பு” தான்.
நகர்மன்றத்தை கலைப்பதற்கு கோருவதை அல்லது நீதிமன்றத்தை அனுகுவதை தவிர வேறு வழியில்லை. பூனைக்கு யார் தான் மணி கட்டுவார்கள்? இன்ஷா அல்லாஹ் விரைவில் நடக்கலாம்.
மக்கள் பணியில்
பா.மு.ஜலாலி பி.எஸ்.இ.
மக்கள் சேவா கரங்கள்
காயல்பட்டணம்.
Re:... posted byJalali (Kayalpatnam)[05 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21873
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாதம் மாதம் நமதூர் முனிசிபல் சாதாரண கூட்ட செய்திகளை நெட் வாசகர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கின்றோம். ஊர் மக்கள் அனைவரும் இந்த நிகழ்வுகள் போய் சேர்ந்திருக்குமா என்றால் அவை போய் சேரவில்லை என்பதே நம் அனைவரது கருத்துகளும், நமதூரின் இதய பிரச்சனையான குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஒரே அமர்வு முனிசிபல் மன்றம்தான். அந்த முனிசிபல் மன்றத்தில் குடிநீர் தீர்வு உள்ளிட்ட எந்தவித தீர்வுகளும் காணப்பெறாமல் இருப்பது நமது குறைபாடே ஆகும்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே இந்த பொது விஷயங்களில் ஒற்றுமையின்மையே இவற்றுக்கெல்லாம் மூல காரணம். இவர்கள் ஏன் தலைவி ஆபிதா அவர்களுடன் ஒருமித்த கருத்துக்கள் ஏற்படாததன் காரணம் என்ன? வெளிநடப்பு செய்யும் உறுப்பினர்கள் மன்றத்திற்குள் நுழையும் போதே வெளிநடப்பு கோஷத்தை முன் வைக்கவில்லையே? அவர்களது இத்தியாதிகளை முடித்து விட்டு தானே வெளிநடப்பு செய்ய வருகின்றனர். இதிலிருந்து புரிகின்றதா? உள்நோக்கம் என்ன வென்று எய்தவர் இருக்க அம்பை நோவானேன்? என்பது யாவரும் அறிந்த மொழி. அதற்காக அம்பை சும்மா விட்டு விடுவார்களா? அம்பையும் சேர்த்து முறித்து, சகாப்தத்தை படைக்க வேண்டும் என்பதே வீர வெறியர்களின் அவா.
எய்தவரின் மறைவிற்கு பின்பு (யாவருக்கும் மறைவு இயற்கையே) அம்புகளின் பாடு திண்டாட்டம் தானே. அம்புகளாக பார்த்து திருந்த வேண்டும். ஊர் நன்மையை கருத்தில் கொண்டு, உழைக்கனும் சுயமாக தொழில் புரியவேண்டும். மக்களின் தேவைகளை புர்த்தி செய்ய அனைவருடன் ஒத்துழைக்க வேண்டும்.
தலைவி அவர்கள் மீதும் குறையிருக்கின்றது. இந்த நேரத்தில் சுட்டிகாட்டியே ஆகவேண்டும். நகராட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கும் அந்த கூட்டத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாடு விளக்க நோட்டீஸ் வினியோகம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அந்த இடம் தான் கிடைத்ததா? அதற்கு அடுத்த நாள் (அல்லது அதன் பின்பு) நோட்டீஸ் முனிசிபல் நிர்வாகிகளின் முழு தெரியப்படுத்துதலின் பேரில் வினியோகம் செய்து இருக்கலாம்.
எங்கே தலைவி சிறு பிழை செய்யமாட்டார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணை விட்டும், புதக்கண்ணாடியாலும் அலசுவதற்கு காத்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் தலைவி இந்த நோட்டீஸ் வினியோகம் தவறே. பொது நல அமைப்பின் நிறுவனர் என்ற முறையில் தலைவிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு கணம் செய்யுமுன் என்னிடம் கருத்து கேளுங்கள் என்று. அதை அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சரி இந்த (ஆரஉியட ஊசளைளை) பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வர மக்கள் சக்திக்கு உட்பட்டவைகள் மூன்று 1. தலைவி உறுப்பிகள் இடையே நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் (என்றென்றும் நீடித்தாக இருக்க வேண்டிய கட்டாயம்) 2) நகர்மன்றத்தை கலைத்துவிடுவதற்கு ஏகோபித்த மக்களின் ஒப்பத்தை பெற்று, மனுவாக அளித்து முறைப்படி மாவட்ட ஆட்சியர் மூலம் சிஎம்ஏ நகராட்சிகளின் ஆணையர், சென்னை அவர்களின் அனுமதியை பெற்று அதற்குரிய ஆவணம் செய்படுத்த வேண்டும். 3) நீதிமன்றத்தை நாடி நகர்மன்றத்தை கலைத்திட முனைய வேண்டும்.
அன்பான காயலர்களே! இவற்றிற்கெல்லாம் யார் முடிவு கட்டுவார்கள் (புனைக்கு மணிக்கட்டுவது யார்) காயலர்களே! சிந்திப்போம் செயல்படுவோம். ஒற்றுமைக்கு வழிவகுப்போம்.
இப்படிக்கு
பா.மு.ஜலாலி
நிறுவனர்
மக்கள் சேவா கரங்கள்,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross