Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!... posted byK S Muhamed shuaub (Kayalpatinam)[17 February 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 20529
தம்பி சாளை.பஷீர் இன்னும் சென்னை முகமது புகாரி கொழும்பு ஹசன் இக்பால் எல்லோருடைய கருத்தும் ஆழமாக பரிசீலிக்க படவேண்டியதாகும். ஒரு ஊரினுடைய வரலாற்றை தொகுத்து எழுதுவதென்பது தனி நபரால் முடியக்கூடிய காரியம்தான் .எனினும் அவர் பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் கல்வெட்டு சுவடிகள் படிக்க தெரிந்த அறிந்சர்கள் இலக்கிய தரவுகளை சரியாக பொருளுணர்ந்து உணரக்கூடியவர்கள் என எல்லோரது உதவிகளையும் பெற்றே இப்பணியில் ஈடுபட முடியும் .
ஏற்கனவே சீதக்காதி காயல் பட்டினத்தில் பிறக்கவில்லை. அவர் கீழகரையிதான் பிறந்தார் என அவ்வூர் வாசிகள் பேராசிரியர் பெரும் புலவர் நைனார் முகமதுவை வைத்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர் "தென் வகுதை...."என்று வரும் வரிகளுக்கு கீழகரைதான் அது என மட்டை அடி அடித்து பொருள் கொள்கிறார்.
எனவே இது போன்ற வாதங்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லும் வகையில் ஆதாரப்பூர்வமான நமதூர் வரலாற்றை இலக்கிய கல்வெட்டு தொல்பொருள் தரவுகளோடு பதிவு செய்ய வேண்டும்.
இதில் பழம்பெருமை பேச எதுவும் இல்லை. நம் முன்னோர்கள் வந்த வழி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இதை பதிவு செய்யலாம்.
Re:ரியாத் கா.ந.மன்ற பொதுக்கு... posted byK S Muhamed shuaub (Kayalpatinam)[17 February 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 17022
நான் ரியாதை விட்டு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. .ஒன்றிரண்டு பழைய முகங்கள் தென்பட்டாலும் நிறைய புது முகங்கள் காணப்படுகின்றன. முன்பெல்லாம் அல் ஜுமைய்யா கம்பனி மேல்மாடி அல்லது ஏதாவது ஒரு பண்ணை வீடு என்று நடந்த காயல்வாசிகளின் பொதுக்குழு இப்போது ஒரு ஹோட்டலில் நடந்தது குறித்து மிக மிக சந்தோசம்.
எனது பள்ளி நண்பர்கள் பிரபு. சேக்னா சுலைமான் லெப்பை மற்றும் சகோதரர்கள் அப்துல் ரசீத் அபுல் ஹசன் சுமைசி அஹமது சாகிபு காக்கா எல்லோரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
என்னைக் குறித்து அறியாத புதிய நண்பர்களுக்கு இது....
நான் 1997 ல் இருந்து 2002 வரை ரியாத்தில் பணியாற்றினேன். நிறைய காலம் ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டிலும் ஒரு ஆறு மாத காலம் புகழ்பெற்ற "பாண்டா" சூப்பர் மார்கெட்டிலும் பணிபுரிந்தேன். உடல் நிலை சீர்கெட்டதால் நான் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
Re:சங்கரன்கோவில் தொகுதி இடைத... posted byK S Muhamed shuaub (Kayalpatinam)[17 February 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 17020
மக்களை ஏமாற்றும் இந்த "கூட்டணி"என்ற ஏற்பாட்டை 1967ல்
அறிமுகபடுத்திய பெருமை அண்ணாவுக்கும் ராஜாஜிக்கும்தான் உண்டு. அதற்கு முன்பு தமிழக அரசியலில் கூட்டணி என்பதெல்லாம் கிடையாது. 67 ல் காங்கிரசை எதிர்த்து வெல்ல முடியுமா... என்ற சந்தேகம் அண்ணாவுக்கே உண்டு. ஏனெனில் அன்றைய தமிழக அரசியலில் காங்கிரெஸ் மிக பெரும் சக்தி.
அதுவரை அரசியலில் எலியும் பூனையுமாக இருந்த அண்ணாவும் ராஜாஜியும் பதவிக்காக ஓன்று சேர்ந்தனர். "பூணூலை கையில் பிடித்துக்கொண்டு தி.மு. க வுக்கு பிராமணர்கள் ஓட்டளிக்க வேண்டும்" என்று சொன்னார் ராஜாஜி. அதுவரை ராஜாஜியை "குல்லுகபட்டர்" "குள்ளநரி" என்றெல்லாம் விமர்சித்த தி.மு கவினர் அதன்பிறகு அவரை "மூதரின்ஜெர் "என்றனர்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு சில நாட்களிலேயே தி.மு.கவின் உறவு ராஜாஜிக்கு கசந்தது "தேனிலவு முடிந்தது "என்றார் ராஜாஜி. அதன் பிறகு 71 ல் மறுபடியும் காங்கிரசோடு கூட்டணி வைத்தார் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் தோற்றது. இப்படியாகத்தான் இந்த கூட்டணி அசிங்கம் தமிநாட்டில் நிலை பெற்றது. இப்போதெல்லாம் கூட்டணி எனபது போய் "தொகுதி உடன்பாடு" என்று இந்த அசிங்கத்திற்கு புது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்க்கு ஒரு நல்ல உதாரணம். சொல்லலாம்... ஆனால் அட்மின் கத்தரி போட்டு விடுவார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross