Re:... posted byMohamed Thaha (Saudi Arabia)[02 May 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34690
சகோதரர் மக்கி அவர்களின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். பிலால்கள், இமாம்கள் மற்றும் உலமாக்களின் மாத சம்பளங்கள் உயர்த்தப்படவேண்டும். உலமாக்களை கொண்டு தான் நமக்கு மார்க்க கல்வி கிடைத்தது. நம் சந்ததிகளுக்கும் இன்ஷா அல்லாஹ் கிடைக்க இருக்கிறது. காலம் காலமாக ஏழ்மையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். சரியான சம்பளங்கள் இல்லாமல் ஷ்டப்படுகிறார்கள். அவர்களின் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.
Re:... posted byMohamed Thaha (Saudi Arabia)[12 October 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30680
சீனா தேசம் சென்றாலும் சீரிய கல்வியை தேடுங்கள் என்ற கண்மணி நாயகத்தின் நபிமொழிக்கொப்ப கல்வியை தேடுவதும் அது மற்றவர்களுக்கு கிடைக்க தூண்டுகோலாக இருப்பதும் அதனால் ஒரு குடும்பம், அதன் தலைமுறைகள் நன்றாக வாழ்ந்தால் அந்த குடும்பத்தின் துஆக்கள் அவற்றின் நன்மைகள் காலமெல்லாம் அதை ஆரம்பித்து வைத்தவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அதை விட மேலாக, இறை அருளால் பொருளாதாரத்திலும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும் உறுதியோடு இருக்கிற நாம் நம்முடைய உலமாக்கள் துணையோடு இந்த தீனுக்காக ஏதாவது செய்து விட்டு போக வேண்டும் (நாம் நம்முடைய குடும்பம் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்து விடாமல்). இந்த தீனுக்காக என்ன செய்தாய் என்று நாளை மறுமையில் நம்மிடம் கேட்கப்பட்டால் அதற்கு நாம் பதில் சொல்லவேண்டும் அல்லவா? அல்லாஹ் தஆலா அந்த நல்ல நசீபை நம் அனைவர்களுக்கும் தருவானாக ஆமீன்.
Re:... posted byMohamed Thaha (Saudi Arabia)[09 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30596
சதக்கத்துல் ஜாரியா என்னும் நிரந்தர நன்மையை மறுமையில் பெற்றுத்தரக் கூடியவைகளில் மேலானது தண்ணீர் கிடைக்க செய்வதுதான். அதனால்தான் நம் முன்னோர்கள் ஊர் நன்மைக்காக குளங்களை கிணறுகளை வெட்டி அதன் தவாபுகளை பெற்றுக்கொண்டார்கள்.
இது போன்ற நல்ல காரியங்களை எங்களை போன்ற சாமான்ய மக்களும் எங்களின் தகுதிக்கு ஏற்ப சதக்காஹ் செய்து நன்மைகளை பெறுவதற்கு தோதாக இனி வரும் காலங்களில் இது போன்ற செய்திகளை வெளியிடும் போது யாரை தொடர்பு கொள்வது என்பதை தெரியப்படுத்தினால் நல்லது. இந்த ப்ராஜெக்ட் க்கு ஏதும் shortage இருந்தால் தெரியப்படுத்தவும்.
Re:... posted byMohamed Thaha (Jeddah)[29 August 2013] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29837
நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்தியதற்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.இதை போன்ற மக்தப்கள் எல்லா பகுதிகளிலும் எல்லா ஊர்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.நமக்கென்று நம் இமாம்கள் வகுத்துத்தந்த கொள்கைகள் இருக்கிறது.அதை இந்த மக்தப்கள் சொல்லித்தந்து பிற்காலத்தில் எந்த வழிகேட்டிலும் நம் பிள்ளைகள் சென்று விடாமல் இருக்க உதவியாக இருக்கும் என்பதே என் கருத்து.
இது போன்று நாமும் இந்த தீனுக்காக வாழ்நாளில் எல்லா விதத்திலும் உதவியாக இருந்து அல்லாஹ்வின் அருளை பெறுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross