Re:DCW ஆலை விரிவாக்கத்தின் வ... posted byMauroof (Dubai)[10 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15812
CFFC -யின் இந்த கலந்தாலோசனைக் கூட்டம் இன்றைய சூழலில் மிகவும் இன்றியமையாதது. நாசகார DCW -வின் விஷமத்தனமான செயல்பாடுகள் பற்றி சொல்லப்பட்ட ஆதாரப்பூர்வமான விளக்கங்கள், கருத்துக்கள், சட்டத்திற்கு புறம்பான அதன் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடும் பொருட்டு பரிமாறப்பட்ட ஆலோசனைகள், இயற்றிய தீர்மானங்கள் என அனைத்து அம்சங்களும் நன்றாகவே அமையப்பெற்றுள்ளது.
இந்த ஆலையின் செயல்பாடுகள் குறித்து காயல்மாநகரம் உட்பட சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. DCW -விற்கு (சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளுக்கு) எதிரான CFFC -யின் செயல்திட்டங்கள் படைத்த இறைவனின் கிருபையால் வெற்றி பெறட்டும் என பிரார்த்திக்கிறேன். ஜமால் மாமா அவர்கள் கூறியது போன்று ஒரு செயல்திட்டம் செயல் வடிவம் பெற "ஜனபலம், பணபலம், மனபலம்" இம்மூன்றும் மிகவும் அவசியமானது.
ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அவர்கள் கூறிய கண் சிகிச்சை குறித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சகோ. M .E .L .நுஸ்கி மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்களின் கருத்துப்பதிவில் சொல்லப்பட்டிருப்பதை CFFC பரிசீலிக்க வேண்டும்.
வாக்கு பதிவிற்காக தரப்படும் பணம், சேலை, போர்வை மற்றும் இன்னபிற பரிசுப்பொருட்களை போட்டிப்போட்டு வாங்கும் பொதுஜனம் சகோ. செய்யது அலி சொல்லிருப்பதை சிந்தனைக்கு எடுக்க வேண்டும்.
சகோ. லுக்மான் அவர்களின் பதிவு இவ்விஷயத்திற்கு போதுமானதன்று, மாறாக ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் தெரிவித்த "வரி" மோசடி மற்றும் அதனை வலியுறுத்தும் விதம் கருத்து பதிந்துள்ள சகோ. ஸாலிஹ் சொன்ன விவரங்களை வரும் நகர்மன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துங்கள். நகர்மன்ற தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஊர் நலன் நாடி இவ்விஷயத்தில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross