மோடிக்கு ஆதரவா? posted byNIZAR (KAYALPATNAM)[09 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33623
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன் ஆதரவை
அதிமுகாவுக்கு அளித்ததில் ஒன்றும் ஆச்சரியமோ,
அதிர்ச்சியோ இல்லை. அவர்களின் தாரக மந்திரம்
என்னவெனில் மனித நேய மக்கள் கட்சி எங்கு
உள்ளதோ, அதன் எதிரணியில் பொய் சேருவதுதான்.
வேறு எந்த கொள்கையோ கோட்பாடோ இந்த விசயத்தில் இல்லை.
ஜெயாவை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்ற
சீடியில் ஜெயா முஸ்லீம்களையும் கிருஸ்துவர்களையும்
ஏமாற்றி ஒட்டு பெற்று மோடியை பிரதமர் ஆக்க போகிறார்
என்று விளாசி தள்ளுகிறார்.
தமிழகத்தில் இரண்டு பெரிய
திராவிடகட்சிகள் தனித்து நின்றாலும் மோடிக்கு ஆதரவு
தெரிவிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
தவ்ஹீத் ஜமாத்துக்கு உண்மையாக சமுதாய நோக்கம் இருந்திருந்தால் இரண்டு
பேரையுமே தவிர்த்து இருக்க வேண்டும். அதை செய்யாததால் நாலாந்திர அரசியல் கட்சி வரிசையில் சேர்ந்துள்ளது எனலாம்.
இனி இவர்கள் நாங்கள் யோக்கியர்கள், ம ம கா போல் நாங்கள்
அரசியல் கட்சி அல்ல போன்ற வாதங்கள் எடுபடாது.
மேலும்
இவர்கள் யார்பக்கம் சேர்வதாலோ, எதிர்பதாலோ,எந்த பெரிய
பாதிப்பும் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கும் ஏற்படுவதில்லை
என்பது பழைய கணக்குகளில் அறியமுடிகிறது.
இவர்களின் உண்மையான பலம் இவர்கள் தனித்து தங்கள் இயக்க மாநாடு நடத்தினால்தான் தெரியும். ஆனால் இவர்கள் புத்திசாலித்தனமாக
இட ஒதிக்கீடு மாநாடு என்று எல்லோரையும் கூட்டி தங்கள் கூட்டம்போல் ஜெயா போன்ற தலைவர்களுக்கு காட்டுகிறார்கள்.
மொத்தத்தில் இவர்களும் எல்லோரையும் போல் பக்கா அரசியல் வாதியாக மாறி உள்ளார்கள்.
அதனால் நாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்ற தவ்ஹீத் ஜமாத்தின பேச்செல்லாம்
போலியான மேட்டரோ என மக்கள் வியப்பில் உள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross