செய்தி: அரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 20 அன்று மனு வழங்க திட்டம்! நடப்பது என்ன? WHATSAPP குழுமம் ஒருங்கிணைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (jeddah)[14 June 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44038
நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதுதான் உண்மை .
திருசெந்தூரில் இருந்து புறப்படும் தொலைதூர பேரூந்துகள் , மற்றும் அங்கிருந்து திரும்பி வரும் பேரூந்துகள் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேலாக நமதூர் வழியாக வழித்தடம் அமைக்கப்பட்ட பேரூந்துகள் என்பதை ஒருமுறை ஆபிதா மேடத்திடம் கேட்டு தெரிந்துகொண்டேன் .
நமதூரை பொறுத்தவரை பேரூந்துகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஊராகும் . வீரபாண்டியன் பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி வரை பேரூந்திற்கு எந்த வருவாயும் கிடையாது.
தொலைதூரத்தில் இருந்து வேக வேகமாக தூத்துக்குடியிலோ , திருச்செந்தூரிலோ வந்து இறங்கி விடுவோம் . இங்கிருந்து ஊர் வருவதற்கு பல மணி நேரம் காத்துகிடக்கும் சூழ்நிலை. காயல்பட்டினம் போகாது என்பார்.
Trip Sheet , மற்றும் route Paper ஐ காட்டுங்கள் என்று அவரிடம் கேட்க முடியுமா ? இரவு நேரத்தில் இதுபோன்ற இடங்களில் மாட்டிகொண்டால் சமூக விரோதிகளால் தொந்தரவுகள் , இயற்கை உபாதைகளுக்கு பாதுகாப்பாக செல்ல முடியாத சூழ்நிலை . அவசரத்திற்கு Tea coffee என்று எதுவும் சாப்பிட முடியாது .
" நடப்பது என்ன " whatsapp குழுமத்திற்கு வேண்டுகோள் , நீங்கள் கலெக்டரிடம் கொடுக்கும் மனுவில் , காயல்பட்டினம் வழியாக permit போடப்பட்ட அனைத்து பேரூந்துகளிலும் கண்டிப்பாக காயல்பட்டினம் வழி என்ற பெயர்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட சொல்ல வேண்டும் .
இது ஒருபுறம் இருக்க , பேரூந்துகள் மாற்றுபாதையில் செல்ல நாமும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும் .
மெயின் ரோடு மற்றும் நெசவு தெரு ஒருவழி பாதைக்கு தாராளமானது . பேரூந்துகள் எவ்வித சிரமமும் இன்றி செல்லலாம். ஆனால் நாமோ ரோட்டின் இருபுறத்திலும் இருசக்கர வாகனங்களை முறையற்ற விதத்தில் நிறுத்துகிறோம் . ரோட்டில் நடந்து செல்ல கூட சிரமமாக உள்ளது . இதையும் கவனத்தில் எடுத்துகொண்டால் நல்லது .
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையை அணுகலாம் . மேலும் பழுதான சாலைகள் . இதுபோன்ற இடையூறுகளால் பேரூந்துகள் மாற்றுபாதையில் செல்ல காரணமாகிறது .
ஆக " நடப்பது என்ன " whatsapp குழுமம் கலெக்டரை பார்பதுடன் , காவல் துறையையும் பாருங்கள் . பழுதான தெருக்களை சீர் செய்ய பாருங்கள். எல்லா பேரூந்துகளும் நமதூர் வழியாகவே செல்லும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross