காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பல அரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்த்து - ஆறுமுகநேரி/அடைக்கலபுரம் வழியாக - பல
ஆண்டுகளாக செல்கின்றன. இது குறித்து, காயல்பட்டினம் சார்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட மக்கள்
பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு மனுக்களை, பல தருணங்களில் - போக்குவரத்துத் துறையை சார்ந்த அதிகாரிகளிடம் - பல ஆண்டுகளாக -
வழங்கி உள்ளனர்.
இப்புகார்களுக்கு பதில் அளிக்கும் போக்குவரத்து அதிகாரிகள், காயல்பட்டினம் செல்லாமல் செல்ல வேண்டாம் என ஓட்டுனர்களும், நடத்துனர்களும் -
சுற்றறிக்கை வாயிலாக - அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து, ஒரு சில நாட்களுக்கு பேருந்துகள் - காயல்பட்டினம்
வழியாகச் செல்வதும், அதற்கு பிறகு மீண்டும் - ஆறுமுகநேரி / அடைக்கலபுரம் சாலை வழியாக அப்பேருந்துகள் இயக்கபடுவதும் வாடிக்கை.
இவ்வாறு - காயல்பட்டினம் வழியில் இயக்கப்படவேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்களுக்கு - பெரும் மன உளைச்சலும்,
பொருட்சேதமும் ஏற்படுகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த - முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் ஆறுமுகநேரியில் நள்ளிரவில்
இறக்கிவிடப்படுவதால், ஆபத்தான சூழலையும் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
இப்பிரச்சனையை நிரந்தர முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், தற்போது சில முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜூன் 20 திங்களன்று,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மனுவில் - பொது மக்கள் கையெழுத்து வாங்கும் பணி
தற்போது நடைபெற்று வருகிறது.
https://goo.gl/hPw9OR
தற்போதைய முயற்சியை - நடப்பது என்ன? என்ற WHATSAPP குழுமம் ஒருங்கிணைக்கிறது. இந்த குழுமம் சார்பாக - ஜூன் 20 அன்று
நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க - ICICI வங்கி சந்திப்பில் இருந்து பொது மக்களை அழைத்து செல்ல வேன் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக, இந்த குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.ஏ.நூஹு தெரிவித்துள்ளார்.
change.org என்ற உலகளவில் பிரபலான இணையதளத்தின் உதவிக்கொண்டு,
இணையத்தில் ஆதரவு கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. மனு திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில், இணையம் வழியாக 400
கையெழுத்துகளுக்கும் மேல் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இணையம் வழியாக மனுவில் கையெழுத்திட விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியை பயன்படுத்தலாம்:
https://goo.gl/hPw9OR
|