காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
மே 5, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 101]
புதன், ஜுன் 13, 2007
3ஆம் நிலை நகராட்சியை மீண்டும் பேரூராட்சியாக்க கோரிக்கை!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டணம் 3ஆம் நிலை நகராட்சியை மீண்டும் பேரூராட்சி அந்தஸ்துக்கு தரம் குறைத்து அரசாணை வெளியிட பரிந்துரை செய்ய வேண்டி காயல்பட்டணம் மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் ஜனாப் பா.மு.ஜலாலி பி.எஸ்ஸி. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் நிலைகளை உயர்த்துதல், சேர்த்தல், தரம் குறைத்தல் தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை தொடர்ந்து நடக்கின்ற இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சியை தரம் குறைத்து முன்பு இருந்ததை போல பேரூராட்சி அந்தஸ்துக்கு கொண்டு வருவதற்காக வேண்டி எமது அமைப்பின் சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றோம்:
கடந்த சில வருடங்களு;ககு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டணம் நகர பஞ்சாயத்து மட்டும் மூன்றாம் நிலை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி அமைப்புக்கு மாற்றப்படும்போது பூகோள அமைப்பு ரீதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நியதி.
முன்பு தேர்வுநிலை பேரூராட்சி அந்தஸ்தில் இருக்கும்போது குடிதண்ணீர் பிரச்சினை இல்லை. ஆனால் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்ற அவலநிலை உள்ளது. பெயரளவில்தான் காயல்பட்டணம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது. ஆனால் செயல்பாடுகளோ குறைவாகவே உள்ளன. கூடுதலாக குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படவில்லை. குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவில்லை. ஆத்தூர் குடிநீர் ஏற்பாட்டைத் தவிர காயல்பட்டணம் நகர மக்களுக்கு வேறு வழியில்லை. நகராட்சியான பின்பும் மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை. அதிலும் குடிநீர் கட்டணம் மாதம் ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
மூன்றாம் நிலை நகராட்சியான பிறகு ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. இன்று வரை செயல் அலுவலர் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார். தற்போது செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் நகராட்சி இயங்குகின்றது. வேறு ஒரு செயல் அலுவலர் வெளியூரிலிருந்து வந்து கூடுதல் பணியாக நிர்வாகத்தைக் கவனிக்கின்றார்.
அதுபோல நகரமைப்பு ஆய்வாளர் (Planning Inspector) நியமிக்கப்படவில்லை. அதற்காக பலமுறை கோரிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகராட்சியிலிருந்து வாரம் ஒருமுறையோ இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ காயல்பட்டணம் வந்து கூடுதல் பணிகளைச் செய்கின்றார்.
அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் காயல்பட்டணத்தைப் புறக்கணித்துவிட்டு மாற்றுப் பாதையில் இன்னமும் இயங்கி வருகின்றன. நேரக்காப்பாளர் நியமிக்கக் கோரியும் அரசு செவி சாய்க்கவில்லை. பேருந்து கால அட்டவணை பலமுறை கேட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) திருநெல்வேலி மண்டலம் இதுவரை நகராட்சிக்கு அளிக்கவில்லை.
அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது. காரணம் கேட்டால் பொறுப்பில்லாமல் பதில் சொல்கின்றனர். காயல்பட்டணத்தில் உப மின்நிலையம் (Sub Station) அமைய வாய்ப்பிருந்தபோதிலும் அரசு முயற்சி எடுக்க முன்வரவில்லை.
காயல்பட்டணம் கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பிக்கக் கோரி பலமுறை கோரிக்கைகள் முன்வைத்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்த இடம் இருந்தும் வாடகை கட்டிடத்தில் காயல்பட்டணம் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வரும் அவல நிலை உள்ளது.
நகர சபை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட போதும் காயல்பட்டணத்தை தனித்தாலுகாவாக செயல்படுத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டைதான் இடப்பட்டுள்ளது.
சாலைகள் செப்பணிடும் விஷயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பேருந்து நிலையத்தின் உள்பகுதி கரடுமுரடாகவே உள்ளது. ரோடுகளில் தார்சாலை தெரிவதில்லை. மணல்கள்தான் தெரிகின்றன. மணல்களை அப்புறப்படுத்த எவ்வித முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை.
வரிவிதிப்பு முறையிலும் காலிமனை வரிகள், அங்கீகார கட்டணங்கள், மனைப்பிரிவுகளை முறைப்படுத்தும் கட்டணங்கள் ஆகியன கூடுதலாகவே மக்கள் செலுத்துகின்றனர். காயல்பட்டணம் நகராட்சியாக இருப்பதால் புறநகர் பகுதி மக்களுக்கு மானிய உதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சியை இந்த ஊர் மக்களின் நகனுக்காக வேண்டி மீண்டும் தேர்வுநிலை பேரூராட்சி அந்தஸ்துக்கு தரம் குறைத்து அரசு ஆணை பிறப்பிக்க பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறோம்...
-இவ்வாறு அவரது கோரிக்கை மனுவில் கோரப்பட்டுள்ளது.
|