காயல்படடினம் குத்துக்கல் தெரு - காட்டு தைக்கா தெரு கீழ்ப்பகுதி ஆகியவற்றை அணைத்தாற்போல் அமைந்துள்ளது முஹ்யித்தீன் பள்ளிவாசல்.
ஹாஜி எம்.எம்.சுல்தான் செயலாளராகவும், 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இப்பள்ளி நிர்வாகத்தில் சேவையாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் தலைவராகச் சேவையாற்றிய ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ அவர்கள் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, 15.04.2016. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பள்ளியின் பொதுக்குழுக் கூட்டத்தில், அல்ஹாஜ் பீ.எம்.எம்.அபுல் காஸிம் பள்ளியின் தலைவராகவும், அல்ஹாஜ் எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் செயலாளராகவும், இவர்களுடன் 16 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா பள்ளியின் இமாமாகவும், சதுக்கைத் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.முஹம்மத் மக்கீ பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நாள்தோறும் மாலை 03.00 மணியளவில் ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்படுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
ரமழானில் நாள்தோறும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், 60 முதல் 80 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், நோன்புக் கஞ்சி, குளிர்பானம், வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
10.06.2016. அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-
முஹ்யித்தீன் பள்ளியில் ஹிஜ்ரீ 1435இல் நடத்தப்பட்ட இஃப்தார் – நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டு, கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 08:50 / 09.08.2016.] |