ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள 100 ஏழைக் குடும்பங்களுக்கு, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில், அத்தியாவசிய சமையல் பொருளுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கடந்த வருடங்களில் ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி காயல் நல மன்றமும் சிங்கப்பூர் நல மன்றமும் இணைந்து புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவந்தன.
இவ்வாண்டு முதல் அபுதாபி காயல் நல மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி நிகழும் ரமழான்(1437) நடப்பாண்டு (2016) நோன்பை முன்னிட்டு அல்லாஹுவின் அளப்பெரும் கருணையால் அபுதாபி காயல் நலமன்றத்தால் தனித்து 100 ஏழை-எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் உணவுப் பொருட்கள் மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த ரமழான் உணவுப் பொருட்கள் வழங்கிட அனுசரணை வழங்கிய அபுதாபி காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக அப்பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியதோடு உள்ளூர் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்திட்ட எம்மன்றதின் முன்னாள் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்களுக்கும், பொருளுதவி பெற்றவுடன் எங்களுக்காக பிரார்த்தித்து துஆ செய்த ஏழைக் குடும்பத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியினை அபுதாபி காயல் நல மன்ற நிர்வாகம் தெரிவித்து கொள்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா!
ரமழானை தந்த ரஹ்மானே!! எங்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருளும் நற்கிருபையும் நல்கிடுவாயாக. ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய - அத்தியாவசிய சமையல் பொருளுதவி வினியோகம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|