தொடக்கக் கல்வித் துறையின் அனுமதியின்றி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்ட - காயல்பட்டினம் பாத்திமா மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதியின்றி செயல்படும் காயல்பட்டினம் பெஸ்ட் ஒன் குரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் 11 பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தற்போது தமிழ்நாட்டில் புற்றீசல் போல் மழலையர் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் கட்டணமும் படிப்புக்கு ஆகும் கட்டணத்தை விட மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத்தது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் அனுமதியின்றி செயல்பட்ட
காயல்பட்டினம் பாத்திமா மழலையர் பள்ளி,
புதுக்கோட்டை பி.ஆர்.ஆர்.மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
கோவில்பட்டி மகாத்மா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
ஆகிய பள்ளிகள் கடந்த மே 26ஆம் தேதி கல்வித் துறையால் மூடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில், 2015_16 கல்வியாண்டில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள்:-
(1) காயல்பட்டினம் பெஸ்ட் ஒன் குரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
(2) விளாத்திகுளம் ஸ்ரீ விவேகானந்தர் வித்யாலயா பள்ளி
(3) பண்ணைவிளை சேவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
(4) ஏரல் இம்மானுவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
(5) சிவகளை பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
(6) மறவன்மடம் அமிர்தா வித்யாலம் சிபிஎஸ்சி பள்ளி
(7) கூட்டுடன்காடு கிட்ஸ் பிளே ஸ்கூல்
(8) புதுக்கோட்டை ராமச்சந்திராபுரம் லலிதா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி
(9) சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
(10) சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி
(11) கோவில்பட்டி ராஜீவ்நகர் டிவிங்கிளிங் கிட்ஸ் பிளே ஸ்கூல்
ஆகிய 11 பள்ளிகள் முன்னனுமதி பெறவில்லை. இவர்கள் அனுமதி பெற்று செயல்பட கடந்த மே மாதம் 27ஆம் தேதி அறிவிப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 3 வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பின்னரும் அனுமதி பெறவில்லையென்றால், மேற்படி பள்ளிகள் பூட்டி சீல் வைக்கப்படும்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
தகவல்:
தூத்துக்குடி ஆன்லைன்
ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |