காயல்பட்டினம் சதுக்கைத் தெரு, அம்பல மரைக்கார் தெரு, நெய்னா தெரு ஆகிய தெருக்களை அணைத்தாற்போல் அமைந்துள்ளது அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளிவாசல்.
சித்தன் தெரு, நெய்னா தெரு, அம்பல மரைக்கார் தெருக்களை அணைத்தாற்போல் அமைந்துள்ளது அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளிவாசல்.
நிர்வாகம்:
இவ்விரு பள்ளிவாசல்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளின் தலைவராக ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், செயலாளராக ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், பொருளாளராக குளவி ஷேக் அப்துல் காதிர் ஆகியோரும், துணைத் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், துணைச் செயலாளர்களாக ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், கத்தீபு இப்றாஹீம், ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா ஆகியோரும், இவர்கள் தவிர 60 நிர்வாகக் குழு உறுப்பினர்களும், கடந்த 14.08.2014. அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சேவையாற்றி வருகின்றனர்.
கத்தீப் - இமாம் - பிலால்:
பெரிய குத்பா பள்ளியின் கத்தீபாக மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, இமாம்களாக ஹாஃபிழ் கே.ஏ.நத்ஹர் ஸாஹிப், மவ்லவீ பீ.எம்.ஓ.முஹம்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோரும், பிலாலாக பீ.கே.டீ.முஹம்மத் உமர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை, இப்பள்ளியின் இமாம் ஹாஃபிழ் கே.ஏ.நத்ஹர் ஸாஹிப் வழிநடத்தி வருகிறார்.
சிறிய குத்பா பள்ளியின் கத்தீபாக மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், இமாமாக மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ ஹாமித் லெப்பை ஃபாஸீ, பிலாலாக முஹம்மத் தாஹா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை, ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃளம் வழிநடத்தி வருகிறார்.
இவ்விரு பள்ளிகளிலும், ரமழானில் இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் நடைபெறுகின்றன.
நோன்புக் கஞ்சி:
ரமழான் மாதத்தில், வழமை போல இப்பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இரு பள்ளிகளிலும் நாள்தோறும் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியை - ஒவ்வொரு பள்ளியிலும் தலா 150 முதல் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
நாள்தோறும் இப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரிய குத்பா பள்ளியில் 50 முதல் 65 பேர் வரை கலந்துகொள்கின்றனர். சிறிய குத்பா பள்ளியில் 60 முதல் 75 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை வகைகள் உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
10.06.2016. அன்று பெரிய குத்பா பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-
10.06.2016. அன்று சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-
சிறிய - பெரிய குத்பா பள்ளிகளில் ஹிஜ்ரீ 1435இல் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குத்பா பெரிய - சிறிய பள்ளிவாசல்களின் வரலாறுகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குத்பா பெரிய - சிறிய பள்ளிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|