அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பால், காயல்பட்டினம் சொளுக்கார் தெரு அ.க. பெண்கள் தைக்காவில், நஹ்விய்யா மக்தப் எனும் பெயரில் மக்தப் மத்ரஸா நடத்தப்பட்டு வருகிறது. திருமறை குர்ஆனை தஜ்வீதுடன் ஓத இந்த மத்ரஸாவில் பயிற்றுவிக்கப்படுகிறது.
மத்ரஸா முதலாமாண்டு மீலாத் விழா, 25.01.2016. திங்கட்கிழமையன்று, மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது. இதில், மாணவ-மாணவியரின் பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கிராஅத், சூரா மனனம் உள்ளிட்ட போட்டிகளும் நடததப்பட்டு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பரிசுகளை, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் வழங்கினார். முத்துவாப்பா, ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், JAS Perfumes அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் பரிசுகளுக்கு அனுசரணையளித்திருந்தனர்.
நிறைவில், அனைத்து மாணவ-மாணவியரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையில், அதன் அங்கத்தினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ, ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோரும், காயல்பட்டினத்திலிருந்து ‘மேனேஜர்’ முஸ்தஃபா, கம்பல்பக்ஷ் மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோரும், மத்ரஸா ஆசிரியையரும் இணைந்து செய்திருந்தனர்.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ
அமீரக குருவித்துறைப் பள்ளி ஜமாஅத் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |