Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:20 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17929
#KOTW17929
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 14, 2016
ஹாங்காங் பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2910 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திரளானோர் பங்கேற்ற - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-

காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 8ம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் 28-05-2016. சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு ஜனாப் எஸ்.எம்.ஹஸன் மரைக்கார், ஜனாப் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், ஜனாப் ஏ.ஆர். அப்துல் வதூத் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஜனாப் ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.



கிராஅத் மற்றும் வரவேற்புறை:

ஹாஃபிழ் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.



அமைப்பின் செயற்குழு உறுப்பினர் டி.செய்யது இஸ்மாயில் அனைவரையும் வரவேற்று பேசியதோடு, கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.



அதனைத் தொடர்ந்து பேரவையின் கடந்த பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவை செயலாளர் எம்.செய்யது அஹமது பேசினார்.



வரவு – செலவு கணக்கறிக்கை:

அதனைத் தொடர்ந்து நடப்பு பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பிக்க கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதளித்தது.



ஆண்டறிக்கை:

பின்னர் பேரவையின் எட்டாம் ஆண்டறிக்கையை, பேரவைத் தலைவர் ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:-



• நமதூரில் வசிக்கும் பெண்களுக்கு, அவர்களின் வீட்டு வேலைகள் தவிர்த்த நேரங்கள் அனைத்தும் வீணாக கழிவதைக் கருத்திற்கொண்டு அவர்களின் மனிதவளத்தை, அவர்களுக்கும், நம் சமூகத்திற்கும் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தொழில்மையம் தொடங்கவேண்டும் என்கின்ற நம் அமைப்பின் கனவு திட்டம் இறையருளால் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றது - அல்ஹம்து லில்லாஹ்.

துவக்கமாக தையல் தெரிந்த 100 மகளிருக்கு ரூ15 இலட்சம் மதிப்பீட்டில் தையலகத்தை துவங்கி வேலை வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நம் பேரவையின் சார்பில் KUF HONG KONG GARMENTS & TAILORING என்கின்ற புதிய தையல் தொழில் அமைப்பு நமதூரில் நிறுவப்பட்டுள்ளது. முறையான அரசு அங்கீகாரத்துடன், சட்டதிட்டங்களுக்குட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக செயல்பட வேண்டி அரசு பதிவுக்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.

துவக்கமாக கடந்த 24/05/2016 திங்கட்கிழமையன்று கீழ நெய்னார் தெருவில் முதல் தொழில் மையம் துவங்கப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது. மக்களின் ஆதரவு வந்த வண்ணம் இருக்கின்றது - அல்ஹம்து லில்லாஹ்.

முறையான அரசு பதிவிற்குப் பின் இத்திட்டத்தின் முதன்மை தொழில் மையம் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் இன்ஷா அல்லாஹ் வரும் 10/07/2016 அன்று முதல் செயல்படவுள்ளது. இத்திட்ட செயல்பாட்டிற்காக இதுவரை ரூ5 (ஐந்து) லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.



• தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு, பயனாளிகளுக்கு மொத்தம் 1 லட்சம் ரூபாய் செலவில் தொழிற்கருவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

• பேரவை, கத்தார் காயல் நல மன்றம் மற்றும் ஷிஃபா அமைப்புகளுடன் சேர்ந்து புற்றுநோய் பரிசோதனை 8ஆவது இலவச முகாமை, 27 செப்டம்பர் 2015ல் நமதூர் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.

• நமதூர் மக்களுக்காக நல்லமுறையில் கல்வி பணியாற்றி வரும் இக்ரா கல்வி சங்கத்திற்கும், மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கும் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு தலா ரூ20,000, ஷிஃபாவின் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு ரூ1,50,000 உதவித் தொகையையும் வழங்கியது.

• தாய்லாந்து காயல் நல மன்றத்தின் முயற்சியில் நமதூர் இறைஇல்லங்களில் பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தினுக்கு ரமலான் மாத சிறப்பு நிதி உதவியளிப்பு ரமலானில் நடந்து வருகிறது. அந்நிகழ்வில் கடந்த ஆண்டு நமது பேரவையும் பங்கெடுத்து அதற்காக ரூ40,000 நிதி வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டும் வரும் ரமலானிலும் நம் பேரவையின் பங்களிப்பாக ரூ50,000 நிதி முற்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.

• நமது பேரவையால் செய்யப்பட்டு வரும் நகர்நலப் பணிகள், உதவித் திட்டங்களுக்கு தோள் கொடுக்கும் முகமாக, ஹாங்காங் வாழ் தாய்மார்கள் தமது மனப்பூர்வமாக அளித்து வரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி நிர்வாகிகளின் உரை:

அதன் பின்னர் ஹாங்காங் வந்திருந்த நமதூரின் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிர்வாகிகள் உரையாற்றினர். முதலாவதாக துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அவர்கள் துளிர் நிறுவப்பற்ற வரலாற்றை எடுத்துரைத்தார்.



அடுத்து துளிர் நிறுவனர் வக்கீல்.அஹ்மத் அவர்கள் துளிரை நடத்தும் முறையையும் அதில் ஏற்படும் கஷ்டங்களையும் எடுத்துரைத்து அணைவரின் உதவியையும் கோரினார்.



புதிய செயற்குழு தேர்வு:

அதனைத் தொடர்ந்து ஏ.எஸ்.ஜமால் மாமா அவர்கள் பேரவையின் தேர்வுக் குழுவால் 2016-2018 இரண்டு வருட பருவத்திற்காக தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவினை அறிவித்து அறிமுகப்படுத்த, கூட்டத்தினர் தக்பீர் முழக்கத்துடன் அதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழு வருமாறு:



தலைவர்:

ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி

துணைத் தலைவர்கள்:

எம்.எஸ்.சதக்கு மீரான்
யு.முஹம்மது நூஹூ

செயலாளர்:

பி.எம்.ஐ. ஸஊத்

துணை செயலாளர்:

எஸ். ஹமீதுல் ஆசிகீன்

பொருளாளர்:

பி(B).எஸ். அஹமது சாலிஹ்

செயற்குழு உறுப்பினர்கள்:

1. எம்.கே. ஜமாலுதீன்
2. எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில்
3. யானி எம்.எம். இப்ராஹிம்
4. எஸ்.எச். அபுல் ஹஸன்
5. எஸ்.எஸ். மூசா நெய்னா

6. எஸ்.எச். மக்பூல்
7. எல்.எ.கே. புஹாரி
8. கூஸ் முஹம்மது அப்துல் காதர்
9. எம்.எஸ். ஷேக் தாவூத்

பதவி வழி உறுப்பினர்:

ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ்

தேர்வுக்குழு உறுப்பினர்கள்:

1) ஜனாப் எஸ்.எம்.ஹஸன் மரைக்கார்
2) ஜனாப் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத்
3) ஜனாப் எஸ். பாக்கர் சாஹிப்
4) ஜனாப் கே.எச். செய்யது அலவி
5) ஜனாப் பி.எம்.எஸ்.முஹ்ஸின்









புதிய தலைவரின் ஏற்புறை:

புதிய தலைவர் ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி ஏற்புரையாற்றினார். அவரது தலைமையிலான புதியக்குழு நமதூரிலுள்ள நலிவுற்றவர்களுக்கு நற்பணிகளையாற்றிட பாடுபடும் என்றும், ஹாங்காங், சீனா, மக்காவிலுள்ள அனைவரும் பேரவையில் சேர்ந்து பேரவையின் பணிகளுக்கு உதவியளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.



மற்ற நிகழ்வுகள்:

பேரவையின் ஷிஃபா பிரதிநிதி எம்.செய்யத் அஹ்மத் ஷிஃபாவின் செயற்பாடுகளை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

டி.செய்யது இஸ்மாயில் நன்றி கூறினார். நிறைவாக கவ்லூன் மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் எம்.ஏ.கே. ஷூஅய்ப் நூஹ் மஹ்ழரி அவர்களின் இறை வேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.

கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சுவையான மீன் பிரியாணி வழங்கி உபசரிக்கப்பட்டது.












இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் பேரவையின் முந்தைய (7ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கடந்த முறை (2014) ஹாங்காங் பேரவைக்கு புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved