இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நிகழும் ரமழான் மாதம் 25ஆம் நாளன்று, நகரின் ஏழை - எளிய குடும்பத்தினருக்கு, நோன்புகால இலவச அரசி வினியோகம் செய்வதென நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டணம் நகர கிளையின் ஊழியர் கூட்டம், 11.06.2016 சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில், காயல்பட்டணம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
காயல்பட்டணம் நகர மூன்றாவது வார்டின், மாவட்ட பிரநிதி எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா) கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஐந்தாவது வார்டு செயலாளர் என்.டி.அஹ்மது சலாவுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூசாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மது ஹசன், பதினேலாவது வார்டு தலைவர் ஜெ.உமர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நடப்பாண்டு ரமழான் மாதத்தில் - வழமை போல காயல்பட்டணம் நகரின் ஏழை - எளிய குடும்பத்தினருக்கு இலவச அரிசி வினியோகம் செய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பின் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ரமழான் 25 அன்று இலவச அரிசி வினியோகம்:
காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஏழை-எளிய மக்கள் 1000 பேருக்கு நோன்பு கால இலவச அரிசியை, ரமழான் பிறை 25 அன்று மாலை 04.30 மணியளவில், கட்சியின் அலுவலக வளாகத்தில் வைத்து வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - இலவச அரிசி நிதி சேகரிப்புக் குழு:
நடப்பாண்டு இலவச அரிசி வினியோகத்திற்கான நிதியை சேகரிப்பதற்கு
(1) எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா)
(2) எம்.ஏ.முஹம்மது ஹஸன்
(3) ஏ.எல்.எஸ்.அபூசாலிஹ்
(4) எம்.ஜெட்.சித்தீக் ஆகியோர் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா) துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கலந்தாலோசனைக் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் நகர மற்றும் வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ரமழானில் இலவச அரிசி வினியோகிக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|