Re:...சட்டியில் சோறிருந்தால் அகப்பையில் வரும் ,, , posted bymackie noohuthambi (kayalpatnam )[28 December 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45037
நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது அமைத்த ஒரு முன்னணி நான் முதல் செயலராக பணியாற்றிய முன்னணி -
இளைஞர் ஐக்கிய முன்னணி சகோதரர்களின் கோரிக்கை நியாயமானது, உணர்வு பூரணமானது.பொது சேவைகளில் அவர்கள் வெற்றி கண்டு வருவதும் பாராட்டுக்கு உரியது.
ஆனால் இந்த நாட்டில் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்ற பெயர் கிடைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் எடுத்த முன் யோசனை இல்லாத எந்த பொருளாதார நிபுணர்களையும் கலந்தாலோசிக்காமல் ரிசர்வ் வாங்கி ஆளுநரைக் கூட கலந்தாலோசிக்காமல், முன்னாள் ரிசர்வ் வாங்கி ஆளுநர் மறுத்துரைத்த ஒரு தன்னிச்சையான தான் தோன்றித்தனமான நடவடிக்கை என்று நோபல் பரிசு பெற்று அமிர்தா செயின் தனது விரிவான அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் அளித்த பேட்டியும் மோடி அவர்களின் நடவடிக்கை தோற்றுப் போய் விட்டதை மிக நேர்த்தியாக சொல்கிறார். நாட்டில் இப்போது பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாத நோட்டுக்களாக இல்லை. மாறாக புதிதாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்களாக புழக்கத்தில் வந்து விட்டதை நாளிதழ்களில் சாதாரண அன்றாட செய்திகளாக பார்க்க முடிகிறது.
சிதம்பரம் சொல்வதுபோல் இன்னும் 6 மாத காலத்துக்கு இந்த பிரச்சினை இருந்தே தீரும். ஒரு மாதத்துக்கு 300 கோடி தாள்கள் மட்டுமே அச்சடிக்க முடியுமாம். அப்படியானால் புழக்கத்திலிருந்து அகற்றப் பட்ட நோட்டுக்களுக்கு பகரமாக அதே அளவு புதிய நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் வர இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்ற அவரது வாதம் நிதர்சன உண்மை என்பது நன்றாக தெரிகிறது. இதை புரிந்து கொள்வதற்கு சராசரி 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
எனவே, மோடி சொல்வதுபோல் இந்த மாதம் முடிந்து புத்தாண்டு பிறந்தவுடன் எல்லா நிலைமையும் சீராகி விடும். வங்கிகளில் பணம் வந்து குவியும். ATM மில்லும் பணம் தாராளமாக வெளியே வரும் என்பதெல்லாம் கற்பனை கலந்த DUPE .
இளைஞர் ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் இந்த நேரத்தில் மக்களுக்கு ஒரு உதவி செய்யலாம். 10 பேர் கொண்ட இளைஞர் குழு செயலில் இறங்கி வங்கி வாசல்களில் கூடி நிற்கும் மக்களுக்கு வங்கி முதல்வரிடம் சொல்லி அவர்கள் உட்காருவதற்கு இட வசதி செய்து கொடுக்கலாம். டோக்கன் பெற்றுக் கொண்டு வரிசையில் அவர்க வருவதற்கு ஏற்பாடு செய்யலாம். தேவையான WITHDRAWAL SLIP /DEPOSIT SLIP நிரப்பிக் கொடுக்கும் உதவிகள் செய்யலாம்.
இந்த பாரங்களை நிரப்பவே சங்கட பட்டுக்கொண்டிருக்கு மக்களுக்கு DIGITAL CASHLESS ECONOMY என்ற பாடத்தை எப்படி சொல்லிக் கொடுக்க முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross