Re:... posted bynizam (india)[28 December 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 45038
ஆக பூனை குட்டி வெளியே வந்து விட்டது.
பண நீக்க திட்டம் தோற்றுவிட்டது நேற்று முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டி சரித்திரத்தில் பொன்னெழுத்தில் பதிக்க படவேண்டியவை.
சரியான அளவு பணத்தை முன்கூட்டியே அச்சடிக்காதது
ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சரியான புரிந்துணர்வு இல்லாதது
இந்த பண நீக்கத்தின் தாக்கத்தை சரியாக முன்கூட்டியே கணக்கிடாதது
இந்த திட்டத்தின் பின்னடைவுக்கு காரணமாக கருத படுகிறது.
இதன் உள்ளங்கை நெல்லிக்கனியாக பெட்டி பெட்டியாக பிடிபடும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கத்தைகள், ஆரம்பத்தில் கள்ள கருப்பு நோட்டுக்கு எதிராக சொல்லி ஆரம்பித்த இந்த நடவடிக்கை தற்போது டிஜிட்டல் பொருளாதாரம் என்று பல்டி அடிப்பது ஆரம்பத்தில் தெனாவட்டாக விவாத்தில் பேசிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் தற்போது ரிசர்வ் வங்கியை குற்றம் சாட்டுவது இதன் தோல்விக்கு அத்தாட்சியாக கருதலாம்
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கேற்ப வங்கியில் பணம் இல்லை என்பதும் அது சரியாக திரு சிதம்பரம் கூறுவது போல நீண்ட காலம் ஆகும் என்பதுதான் எதார்த்தம் ஆக இந்த பிரச்சினையில் தீர்வு செலவுகளை சிக்கனப்படுத்துவது கூடிய மட்டும் ஏ டீம் எம் ஆன்லைன் பரிவர்த்தனையில் செலவுகளை செய்வது சிறு தொழில் வணிகர்கள் பீ ஓ எஸ் மெஷின்களை வாங்கி வைப்பது (இது விஷயத்தில் காயல் சமூக தொண்டு நிறுவனங்கள் உதவலாம்) பெரு நகரங்களில் இருப்பவர்கள் தங்களது பந்தங்களுக்கு நண்பர்களுக்கு பணம் எடுத்து அனுப்பி வைக்கலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross