வாடிக்கையாளர் அவதிகளைப் போக்க காயல்பட்டினம் வங்கிகளுக்கு அதிகளவு பணம் அனுப்புமாறு அதிகாரிகளுக்கு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) கோரிக்கை வைத்துள்ளது. அக்கடிதத்தில், அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கோரியுள்ளதாவது:-
மத்திய அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணத்தாள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் காரணமாக, காயல்பட்டினம் நகர வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெருவரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை நீண்ட நாட்களாக உள்ளது.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கும் - வங்கி அலுவலர்களுக்குமிடையில் அடிக்கடி வாக்குவாதரங்களும், பிரச்சினைகளும் ஏற்படுவதோடு, வாடிக்கையாளர்களிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப வழங்குவதற்கு போதிய அளவில் பணமில்லாமையே இத்தனைக்கும் காரணமாகும்.
தம் சொந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்காக பொதுமக்களை இவ்வளவு அவதிகளுக்கு உள்ளாக்கியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
எனவே, காயல்பட்டினத்திலுள்ள வங்கி வாடிக்கையாளர்களின் அவதிகளைப் போக்கும் வகையில், அதிகளவில் பணத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|