செய்தி எண் (ID #) 18609 | | | புதன், டிசம்பர் 28, 2016 | நள்ளிரவில் சாரல்! நண்பகலில் இதமழை!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1848 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
வடகிழக்குப் பருவமழை துவங்கியதிலிருந்து, குறிப்பிடும்படியாக மழை பெய்யாத நிலையில், பல நாட்களாக வெயிலும் அதிகளவில் இருந்த காரணத்தால் இம்முறை பருவமழை பொய்த்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது.
இந்நிலையில், இன்று 12.30 மணியளவில் சாரலும், 02.30 மணியளவில் இதமழையும் பெய்தது. மீண்டும் 14.30 மணியளவில் துவங்கி, சிறிது நேரம் இதமழை பெய்தது. “வழமை போல” நகர வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நகரில் வெப்ப வானிலை மாறி, குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறிதளவே மழை பெய்துள்ள நிலையிலும் - இரவிலும், பகலிலும் தொடர்ந்து மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மின் வாரியத்தில் வினவியபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|