| |
செய்தி எண் (ID #) 18616 | | | வெள்ளி, டிசம்பர் 30, 2016 | ‘பணமற்ற வாழ்க்கை’ - எழுத்து மேடை மையத்தின் திரையிடல் & கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி! ஜன. 02 அன்று, ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறுகிறது!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1911 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், “பணமற்ற வாழ்க்கை” எனும் தலைப்பில் - குறும்படத் திரையிடல் & தலைப்பு குறித்த கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி, வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் நாளன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 02 / 01 / 2017 திங்கள் கிழமை இரவு 08:00 மணிக்கு நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க திடலில் ( UNITED SPORTS CLUB – USC ) எழுத்து மேடை மையம், தமிழ் நாடு இன் சார்பில் 14 ஆம் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் “ பணமற்ற வாழ்க்கை “ ( 1 மணி நேரம் , ஆங்கில துணைத் தலைப்புக்களுடன் ) என்ற தலைப்பில் ஆவணப்படங்களின் திரையிடல்களும் அதனைத் தொடர்ந்து கருத்து பரிமாற்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
நடுவணரசு அறிவித்துள்ள செல்லாக்காசு விவகாரம் நாடு முழுக்க பலவிதமான உணர்வலைகளையும் விவாதங்களையும் கிளப்பி வருகின்றது.
நாம் ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் அன்றாடம் கண்டும் கேட்டும் வரும் விவாத தலைப்புகளுக்கு அப்பால் நின்று புதியதொரு கோணத்தில் இந்த சமூக பொருளாதாரப் பிரச்னையை அணுகுகின்றது “ பணமற்ற வாழ்க்கை “. திரையிடல் நிகழ்வு.
பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பலனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|