காயல்பட்டினம். நகராட்சி எல்.எப். சாலை - மாநில நெடுஞ்சாலை ஆகும். நகரின் பிரதான சாலையான இதில் அரசு பேருந்து நிலையம், ரயில்
நிலையம், பத்திர பதிவு அலுவலகம், விளையாட்டு திடல், வணக்கஸ்தலங்கள் என அதிக மக்கள் / வாகன பயன்பாட்டு காரணிகள் அதிகம்
அமைந்துள்ளன.
இப்பகுதியில் - குறிப்பாக மகாத்மா காந்தி நினைவு ஆர்ச் அருகில், வாகனங்கள் வேகமாக செல்வதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே
- சேக் ஹுசைன் பள்ளி எதிரில், எல்.எப். சாலையில் - நெடுஞ்சாலை துறை ஏற்பாட்டில் வேக தடை (SPEED BREAKER) அமைத்து - விபத்துகள்
நேராமல் பாதுகாப்பது அவசியமாகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்திய மனு, செவ்வாயன்று (டிசம்பர் 27) திருச்செந்தூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட அலுவலகத்தில்,
கண்காணிப்பாளர் திருமதி சிவகாமியிடம் - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள்/அங்கத்தினர் S.அப்துல் வாஹித், சாளை நவாஸ், MW ஹாமீத் ரிபாயி,
MM முஜாஹித் அலி, MS முஹம்மத் சாலிஹு ஆகியோரால் வழங்கப்பட்டது.
மனுவினை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர், அப்பகுதியை தான் தினமும் பயன்படுத்துவதாகவும், இது குறித்த நடவடிக்கையை துரிதமாக
எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
பழுதடைந்துள்ள நெடுஞ்சாலையை புனரமைக்க நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்ட மனு விபரம்
காயல்பட்டினம் நகராட்சி எல்லை பகுதிக்குள் உள்ள மாநில நெடுஞ்சாலை - கே.டி.எம். தெருவின் வடக்கு பகுதியிலும் (அல் ஜாமியுல் அஜ்ஹர்
ஜும்மா பள்ளி அருகில்), தெற்கு பகுதியிலும் (தாயிம்பள்ளி சந்திப்பு அருகில்) மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இது சம்பந்தமாக - கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு மனுக்கள் - மாவட்ட ஆட்சியர் மூலமாக, நெடுஞ்சாலை துறைக்கு நடப்பது
என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் பெற்றபின் அப்பணிகள்
செய்யப்படும் என பல மாதங்களுக்கு முன்பே பதில் வழங்கப்பட்டது. இருப்பினும் இது வரை இப்பணிகள் செய்யப்படவில்லை.
சமீபத்தில் - ஓடக்கரை அருகே நெடுஞ்சாலை துறையின் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இது குறித்து நினைவுகூறப்பட்டது.
அப்போதும், இப்பணிகள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டும், அப்பணிகள் செய்யப்படவில்லை.
இதனால் - பொது மக்கள் மற்றும் பேருந்துகள் உட்பட வாகன ஓட்டுனர்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே - இது
குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கேட்டு கொள்கிறோம்.
|