பொன்னன்குறிச்சியிலிருந்து, காயல்பட்டினத்திற்கு தனியாகக் குடிநீர் வினியோகிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இரண்டாவது பைப்லைன் திட்டம் அறிவிக்கப்பட்டு, கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினம் வரையிலான வழித்தடத்தில், முதன்மைக் குழாய் பதிக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெருக்களில் குழாய்கள் பதிக்கும் பணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபெற்றது.
இவ்வாறிருக்க, 31.12.2016. சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் முதன்மைச் சாலையில் வினியோகக் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.
|