| |
செய்தி எண் (ID #) 18621 | | | ஞாயிறு, ஐனவரி 1, 2017 | மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காயல்பட்டினத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சியிடம் மனு! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 1509 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக - நகரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை மனு, புதனன்று (டிசம்பர் 28) - ஆணையர் (பொறுப்பு) திரு அறிவுச்செல்வனிடம் வழங்கப்பட்டது. இது குறித்து அக்கட்சி சார்பாக வெளியாகியுள்ள தகவல் வருமாறு:
காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை சந்தித்து - காயல்பட்டினத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் - நகரசெயலாளர் ஜிப்ரி தலைமையில், நகர பொருளாளர் மீரான், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட
இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது நஜிப், நகர துணை செயலாளர் ஜியாவுதீன், நகர இளைஞரணி துணை செயளாலர் ஜரித் நகர மாணவர் இந்தியா துணை செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் நகராட்சி ஆணையரிடம் - ஏற்கனவே சட்டசபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் M. தமிமுல் அன்சாரி MLA - இது சம்பந்தமாக பேசியதையும், மேலும் உயர் நீதிமன்றம் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரி நீதிமன்றம் தீர்ப்பு வந்திருப்பதை பற்றியும் விரிவாக எடுத்து கூறப்பட்டது.
இது கூறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக
நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.
இவ்வாறு அக்கட்சி சார்பாக, வெளிவந்துள்ள தகவல் தெரிவிக்கிறது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|