வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் மின்னொளி கைப்பந்து இறுதிப் போட்டியில், Sulthan Warriors அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் கைப்பந்து போட்டிகள் 2016 டிசம்பர் 30, 31 மற்றும் 2017 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் Kayal Manchester, Fi-Sky Boys, Sulthan Warriors மற்றும் RK Safwaa அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
2017 ஜனவரி 1ஆம் தேதி மாலை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் Sulthan Warriors அணியும், RK Safwaa அணியும் விளையாடியது. இப்போட்டியில் Sulthan Warriors அணி 15 - 5 என்ற புள்ளி கணக்கில் முதல் சுற்றையும், இரண்டாவது சுற்றை RK Safwaa அணி 15 - 11 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றிபெற்றன.
எனவே இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்ற முடிவு செய்யும் மூன்றாவது சுற்றில் பரபரப்பு ஏற்பட்டது, இறுதியில் Sulthan Warriors அணி 15 - 10 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், Fi-Sky Boys அணியும், Kayal Manchester அணியும் விளையாடின. இப்போட்டியில் Fi-Sky Boys அணி 15 - 9, 15 - 12 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Sulthan Warriors அணி 25 - 23, 25 - 13 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றிபெற்று வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் மின்னொளி கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு வீ-யூனைடெட் குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப் U.முஹம்மது நூகு தலைமைதாங்கினார், L.T.S.Gold House நிறுவனர் ஜனாப் சித்தீக் முன்னிலை வகித்தார், ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப். ஹாஜி இல்லியாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள்.
துவக்கமாக இறைமறை வசனத்தை சகோ. அலாவுத்தீன் ஓதினார், வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. M.A. மாஹீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்கள்.
பரிசளிப்பு விழாவின் துவக்கமாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற Kayal Manchester மற்றும் RK Safwaa அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை L.T.S. சித்தீக் அவர்கள் வழங்கினார்கள்.
வெற்றிக்கு முனைந்த அணியின் வீரர்களுக்கான நபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையை U.முஹம்மது நூகு அவர்கள் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையை ஹாஜி இல்லியாஸ் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரைக்குப்பின் தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சிகளை சகோ. காழி அலாவுத்தீன் தொகுத்து வழங்கினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
|