காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் ஆசிரியர் - சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீயின் தாயார் - நஹ்வீ எம்.ஐ. புகாரீ ஜெய்னப் ஹாஜ்ஜா - இன்று 11:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,
மஹ்ழராவின் முன்னாள் முதர்ரிஸ் மர்ஹூம் அல்லாமா அல்ஹாஃபிழ் நஹ்வீ செய்யித் அஹ்மத் ஆலிம் முஃப்தீ அவர்களின் மகன் வழிப் பேத்தியும்,
மர்ஹூம் அல்லாமா அல்ஹாஃபிழ் நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ என்ற பெரிய ஆலிம்ஷா அவர்களின் இளைய மகளும்,
மர்ஹூம் அல்லாமா சுல்தான் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் எஸ்.எல்.அஹ்மத் ஆலிம் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் கத்தீப் அல்ஹாஃபிழ் மு.க.செய்யித் அஹ்மத் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் அல்ஹாஃபிழ் நஹ்வீ மு.க.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் மு.க.செய்யித் நூஹ் ஆலிம் முஃப்தீ ஃபலகீ, மர்ஹூம் கத்தீப் நஹ்வீ மு.க.முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் முஃப்தீ ஆகியோரின் சகோதரியும்,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீயின் (தொடர்பு எண்: +91 99423 05955) தாயாரும்,
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாஈல், மர்ஹூம் ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர், மர்ஹூம் ஹாஃபிழ் எம்.என்.மஹ்மூத், மர்ஹூம் எம்.என்.முஹம்மத் இஸ்மாஈல் (நூஹிய்யா), நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, கீழக்கரை நஹ்வீ எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம், நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
ஒய்.எஸ்.ஃபாரூக், நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத், ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா ஆகியோரின் மாமியும்,
மர்ஹூம் ஊசி செய்யித் அஹ்மத் புகாரீ, ஊசி முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் ஊசி முஹம்மத் அப்துல் காதிர், ஊசி பாதுல் அஸ்ஹப், எம்.அஹ்மத் ஃபுஆத் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஹாஃபிழ் எஃப்.ஷெய்கு ஸலாஹுத்தீன், ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத், ஜெ.மஹ்மூத் புகாரீ ஆகியோரின் கண்ணும்மாவும்,
எஸ்.ஏ.சி.அஹ்மத் ஸஈத், பாலப்பா ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் வாப்பிச்சாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (06.01.2017. வெள்ளிக்கிழமை) 09.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
விரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்...
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப் & மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ
[விரிவான தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 19:06 / 05.01.2017.] |