பொன்னன்குறிச்சியிலிருந்து, காயல்பட்டினத்திற்கு தனியாகக் குடிநீர் வினியோகிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இரண்டாவது பைப்லைன் திட்டம் அறிவிக்கப்பட்டு, கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினம் வரையிலான வழித்தடத்தில், பிரதான குழாய் பதிக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெருக்களில் குழாய்கள் பதிக்கும் பணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபெற்றது.
இவ்வாறிருக்க, 26.12.2016. திங்கட்கிழமையன்று, காயல்பட்டினம் புதுப்பள்ளியருகிலுள்ள குறுக்குச் சாலையில், பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் - முதன்மை வினியோகக் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.
|