திமுக காயல்பட்டினம் நகர நிர்வாகி எஸ்.இ.பஷீர் அஹ்மத் என்ற (DMK பஷீர்) உடைய மனைவி - காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த சொளுக்கு எம்.ஏ.எம்.சுலைஹா உம்மாள், இன்று (24.12.2016. சனிக்கிழமை) 22.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67. அன்னார்,
மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் ஹஸன் மரைக்கார் அவர்களின் மகளும்,
மர்ஹூம் செய்யித் ஈஸா அவர்களின் மருமகளாரும்,
திமுக காயல்பட்டினம் நகர முன்னாள் நிர்வாகி மர்ஹூம் S.E.பஷீர் அஹ்மத் என்ற DMK பஷீர் அவர்களின் மனைவியும்,
சொளுக்கு M.A.M.கஸ்ஸாலி மரைக்கார் என்பவரின் சகோதரியும்,
பி.ஏ.ஷாஹுல் ஹமீத், சொளுக்கு பி.ஏ.முஹம்மத் ஹஸன், பி.ஏ.ஸிராஜுத் தவ்லா, பி.ஏ.ரிஸ்வான் அஹ்மத், பி.ஏ.தாயிஃப் சுல்தான் ஆகியோரின் தாயாரும்,
எம்.ஏ.காஜா முஹ்யித்தீன், எஸ்.எம்.முஹம்மத் ஷமீம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (25.12.2016. ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|