முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாமில் பதிவு செய்தோரின் நிழற்படங்கள் & கைரேகைகளைப் பதிவு செய்யும் பணியில், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் தங்களின் மருத்துவ செலவுகளை பயன்படுத்தும் வகையில் அத்திட்டத்தின் இணைத்துக் கொள்ள ஏதுவாக ஷிஃபா ஹெல்த் & வெல்பேர் ட்ரஸ்ட் சார்பாக சென்ற ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற்றது , அந்த முகாம்களில் நகர மக்கள் பலர் தங்கள் பெயர்களை பதிந்து கொண்டனர்,
அவ்வாறு பதிந்த அனைவரின் குடும்ப அட்டை எண்களை பரிசோதனை செய்து ஏற்கனவே காப்பீட்டு பதிவாகி உள்ளதா என்று கண்டறிந்து , புதிதாக பதியும் கட்டாயம் உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து சென்று அவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதியும் பணியை தற்போது ஷிஃபா ஹெல்த் & வெல்பேர் ட்ரஸ்ட் செய்து வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்),
அப்பணி இப்போது பல கட்டங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது, இது வரை சுமார் 150 நபர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து புகைப்படம் எடுத்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது அதனை சிங்கப்பூர் காயல் நலமன்ற செயற்குழு உறுப்பினர் Janab Salai Nawas அவர்கள் மேற்கொண்டு வருகிறார் மற்றும் ஷிஃபா ஹெல்த் & வெல்பேர் ட்ரஸ்டின் தலைவர் Dr Mohamed Idrees மேற்பார்வை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
இது வரை புகைப்படம் எடுக்காதவர்கள் தங்கள் கையிலுள்ள கிராம நிர்வாக அதிகாரி கையொப்பமிட்ட படிவத்தின் நகலை (XEROX) ஷிஃபா அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் மேலும் இக்காப்பீட்டு திட்டத்தின் பதியாத நபர்கள் விண்ணப்ப படிவம் பெற்று கொண்டு பயனடையுமாறும் இது குறித்த சந்தேகங்கள் உள்ளவர்களும் சதுக்கை தெருவிலுள்ள ஷிஃபா ஹெல்த் & வெல்பேர் ட்ரஸ்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.K.இம்ரான்
(காப்பிட்டு திட்ட பொறுப்பாளர் – ‘ஷிஃபா’)
|