தமிழ்நாடு 2009ஆம் ஆண்டு திருமணங்கள் பதிவு விதிகளின் படி, நவம்பர் 24, 2009ஆம் நாளுக்குப் பிறகு நடைபெறும் அனைத்துத் திருமணங்களும் - அவரவர் மத நம்பிக்கைகளின் படி பதிவு செய்யப்பட்டிருப்பினும், கூடுதலாக பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதன் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டு, நேற்று (23.12.2016. வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப் பின், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது:-
நவம்பர் 24, 2009க்குப் பிறகு நடைபெறும் திருமணங்களை, Form 1A, Form 2 ஆகிய படிவங்களில் விபரங்களைப் பூர்த்தி செய்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். Form 2 ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ளது. ஏதேனும் ஒரு மொழியில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.
Form 1A படிவம் வருமாறு:-
Form 2 படிவத்தின் ஆங்கில வடிவம் வருமாறு:-
Form 2 படிவத்தின் தமிழ் வடிவம் வருமாறு:-
இப்படிவங்கள், காயல்பட்டினத்தில் திருமணப் பதிவேடு (தஃப்தர்) வைத்துள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் - பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிப்பதற்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)
|