செய்தி: ஹாமிதிய்யாவில் ஹாஃபிழ் பட்டம் பெற்ற மாணவர்கள் உம்றா சிறப்புப் பரிசு! தனியார் ஹஜ் சேவை நிறுவன ஏற்பாட்டில் அழைத்துச் செல்லப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அழகிய முன்மாதிரி... posted bymackie noohuthambi (kayalpatnam )[07 May 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45509
பார்த்தப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 1989 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்போது 2 மாணவர்களும் மருமகன் நூருல் ஹக் அவர்களும் மக்கா சென்று புனித உம்ராவை நிறைவேற்றி வருவதற்கு தம்பி MNL சுலைமான் லெப்பை அவர்கள் அன்று உறு துணையாக இருந்தார்.
இன்று அல் பத்தாஹ் நிறுவனம் இந்த பெரும் பணியை முன்னெடுத்து செய்து ஒரு புதிய அழகிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
''வாழ்வதற்கு பொருளும் வேண்டும்
வாழ்வதில் பொருளும் வேண்டும்''
என்று சொல்வார்கள். தொழில் என்று வந்து விட்டாலே அதில் நியாயங்கள் தர்மங்கள் விடைபெற்றுக் கொள்ளும் காலம் இது. பொருளீட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதுதான் தொழில் தர்மம் என்று மாறி விட்ட இந்த கால கட்டத்தில் அல் பத்தாஹ் நிறுவனம் ஒரு புதிய பரிணாமத்தை இங்கே ஏற்படுத்தி இருக்கிறார்கள். 15 மாணவர்களின் துஆ இவர்கள் தொழிலையும் இவர்கள் செயலையும் இமயத்தில் கொண்டு நிறுத்தும். அல்லாஹ்வின் அளப்பரிய கருணையும் கொடையும் இவர்களை சூழ்ந்து கொள்ளும் என்பதில் வியப்பில்லை.
இலங்கையில் இந்த விஷயம் மிக சாதாரணமாக எல்லா ட்ராவல்ஸ் நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஹாபிழ்கள் ஹாபிழாக்கள் ஆலிம்கள் தொழுகை அழைப்பாளர்களான
முஅத்தின்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப் பட்டு வருகின்றன.
ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் ஹாபிள்களை உருவாக்க தொடங்கியது முதல் புகாரி ஷரீப் சபை ஒரு புதிய எழுச்சியை பெற்றது. வருடம் ஒருமுறை நபிகள் நாயகம் புகழ் பாடி அதன் நிறைவு நாள் நேர்ச்சையுடன் அது அடுத்த வருடத்துக்காக காத்திருந்தது ஆனால் அந்த நிலையை மாற்றி வருடம் முழுவதும் அல்லாஹ்வின் புகழையும் வல்லமையையும் அவனது திருத்தூதரின் தூதுத்துவத்தை தத்துவத்தையும் எல்லா பிள்ளைகளும் சிறு வயது முதலே தங்கள் உள்ளங்களில் அவற்றை பதிவு செய்து தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள ஒரு அற்புதமான வடிகாலை வழிமுறையை ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது.
அல்லாஹ்வின் திருமறை
நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறை
நபி தோழர்கள் நல்லோர்களின் நெறிமுறை
இவற்றை தங்கள் அன்றாட நடைமுறைகளாக வாழ்வியலாக இளைஞர்கள் ஆக்கிக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவார்கள் என்ற செய்தியை அழுத்தமாக சொல்லும் இந்த மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பிதாமகன் நூருல் ஹக் அவர்களுக்கும் மற்றும் உஸ்தாது மார்களுக்கும் அங்கு கல்வி கற்ற கட்கின்ற எல்லா மாணவர்களுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து இந்த இறை பணி தொடர்ந்து நடை பெறுவதற்கு அருள் புரிவானாக.
புனித ரமலானை நோக்கி இருக்கும் நமக்கு இந்த திருமறை செல்வர்களின் குரலொலி எங்கெல்லாம் ஒலிக்கும் அதை நாமும் கேட்டு ரசிக்கும் நல் பாக்கியத்தையும் ரமலானில் அதிகமதிகம் திருக் குர் ஆன் ஓதும் பழக்கத்தையும் வாய்ப்பையும் அல்லாஹ் நமக்கெல்லாம் ஏற்படுத்தி தருவானாக ஆமீன்.
சென்று வாருங்கள்
அல்லாஹ்வின் அருளை வென்று வாருங்கள்.
நபிகள் நாயகத்தின் நல்லாசியை கொண்டுவாருங்கள்
என்று வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross