பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனம் சார்பில், தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருந்து, பின்னர் துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொலைபேசி இணைப்பை நிறுவல் கட்டணம் (installation charge) இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என்றும்,
தரைவழி தொலைபேசி இணைப்பு மூலம் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து நெட்வர்க்குகளின் மொபைல்கள் மற்றும் தரைவழித் தொலைபேசி இணைப்புகளுக்கும் - அன்றாடம் 21.00 மணி முதல் மறுநாள் 07.00 மணி வரை முற்றிலும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம் என்றும்,
இன்னும் சில சலுகைகளையும் விளக்கி, பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது:-
காயல்பட்டினம் பகுதிக்கான மறுஇணைப்பு மேளா சிறப்பு முகாம் இன்று (03.09.2015) காலை முதல் மாலை வரை, BSNL தூத்துக்குடி கோட்ட துணைப் பொது மேலாளர் லக்ஷ்மண பெருமாள் தலைமையில், காயல்பட்டினம் தொலைபேசி நிலைய வெளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் தொலைபேசி நிலைய துணைப் பொறியாளர் முருகன், தூத்துக்குடி கோட்ட கணக்குப்பதிவு இளநிலை அலுவலர் ராஜன், அதன் அலுவலர் மாரியப்பன், காயல்பட்டினம் தொலைபேசி நிலைய அலுவலர்கள் இம்முகாமை இணைத்து வழிநடத்தினர். இம்முகாம் மூலம்,
ஏற்கனவே தரைவழி தொலைபேசி இணைப்பைத் துண்டித்த 52 பேர் புதிதாக இணைப்பு பெற்றுள்ளனர். 9 பேர் புதிய இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். BSNL சிம் கார்டுகள் 36 விற்பனையாகியுள்ளது. ப்ராட்பேண்ட் இன்டர்நெட் வசதிக்கு 10 பேரும், பிற மொபைல் நெட்வர்க்குகளிலிருந்து BSNLக்கு மாறுவதற்கு (MNP) 10 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் நிலுவைத் தொகை வகையில், 13 ஆயிரத்து 275 ரூபாய் இம்முகாம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த மறு இணைப்பு மேளாவையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை, இம்மாதம் 22ஆம் நாள் வரை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள இயலும் என்றும், விரும்புவோர் காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
E.முருகன்
துணைப் பொறியாளர்
காயல்பட்டினம் தொலைபேசி நிலையம்
கள உதவி:
ஹாஃபிழ் நஹ்வீ A.M.ஈஸா ஜக்கரிய்யா
BSNL தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |